தமிழக அமைச்சர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கை எடுப்பது சரியா? அல்லது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையா என TNNEWS24 மக்களிடம் ஜனநாயக முறையில் கருத்து கேட்டது இதில் பொதுமக்கள் குறிப்பாக வளரும் தலைமுறையான இளைஞர்கள் தெரிவித்த கருத்து கடும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.
சார் யாரா இருந்தாலும் நடவடிக்கை எடுக்கணும் ஊழல் செஞ்சா நடவடிக்கை எடுக்கணும் அதான் சரி அது CM மா இருந்தாலும் விட கூடாது எனவும் அரசியலில் ஒரு மாற்றம் தேவை எனவும் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் இவங்க இலவச பஸ் விடுவது எல்லாம் வேஸ்ட் இலவசம் என சொல்லிவிட்டு டிலக்ஸ் பஸ்தான் வருகிறது நானே 1000 ரூபாய் கொடுத்து பாஸ் எடுத்து தான் செல்கிறேன் என தெரிவித்து இருக்கிறார்.இளம்பெண்ணின் இந்த துணிச்சலான பேச்சு இளைய தலைமுறையினர் ஊழலுக்கு எதிராக அணி திரளுவதையும் மாற்றத்தை எதிர் நோக்கி காத்து இருப்பதையும் தெளிவு படுத்தி இருக்கிறது.
பல முறை அண்ணாமலை ஊழல் என்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த மனித குலத்திற்கே எதிரி எனவும் இளம் தலைமுறையினர் ஊழலுக்கு எதிரான என் மண் என் மக்கள் பயணத்தில் இணைவார்கள் என எதிர் பார்க்க பட்ட நிலையில் அடுத்த தலைமுறையினரான இளம் தலைமுறையினர் ஊழலுக்கு எதிராக களம் இறங்கி இருப்பது ஆளும் கட்சியான திமுகவை அதிர செய்து இருக்கிறது.