24 special

கூட்டணி மட்டுமல்ல கூட்டணி கட்சியே மாறப்போகுதாம்...! அறிவாலயத்திற்க்கு கிடைத்த மற்றொரு பேரிடி..!

edapadi, annamalai
edapadi, annamalai

அதிமுக பாஜகவின் கூட்டணி முடிவு பெற்றதற்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக இது உள்ளதாகவும் அதிமுக நல்ல முடிவு எடுத்துள்ளது அதனை நாங்கள் வரவேற்கிறோம் என ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் திமுகவின் முதன்மை அமைச்சராக உள்ள முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலின் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியானது இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து இருந்தாலும் விலகினாலும் திமுகவிற்கு எந்த நட்டமும் இல்லை, பெருவாரியாக திமுக தான் அடுத்த ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்திருந்தார். இருப்பினும் அரசியல் வட்டாரங்களில் இந்த கூட்டணி விலகளுக்கு பாஜக தரப்பில் அண்ணாமலை முன்வைக்கும் கருத்துக்களும் சமீபத்தில் அவர் கூறிய சில கருத்துக்களும் தான் அதிமுகவினரை கோபப்படுத்தி இந்த முடிவு எடுக்க வைத்துள்ளது என்ற விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டது.  இப்படி அதிமுக பாஜக கூட்டணி உடைந்ததற்கு பல விமர்சனங்களும் அதற்கு மிக முக்கிய காரணமாக அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கள் தான் என்ற விமர்சனங்களும் தெரிவிக்கப்பட்டு வந்தது. 


இந்த நிலையில், தமிழகத்தின் காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே எஸ் அழகிரியை பதவியில் இருந்து தூக்குவதற்கு ஸ்கெட்ச் போடப்பட்டு ராகுல் காந்திக்கு ரிப்போர்ட் பறந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதாவது கே எஸ் அழகிரியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதாகவும் மேலும் காங்கிரஸ் தலைமையில் ஒரு புது ரத்தத்தை பாய்ச்ச வேண்டும் என சமீப காலங்களுக்கு முன்பாகவே காங்கிரஸ் தலைமை வட்டாரங்களில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் புதிய தலைவரை நியமிக்கும் பணியில் காங்கிரஸ் தலைமை தீவிரமாக இறங்கி உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு 'கே.எஸ்.அழகிரியை பொறுப்பிலிருந்து மாற்றப் போகிறீர்களா அல்லது அவரையே வைத்து அடுத்த தேர்தலை நடத்திக் கொள்ளும் உத்தேசத்தில் இருக்கிறீர்களா?' என கோபமாக கேள்வி எழுப்பி உள்ளார் எனவும் சில தகவல்கள் கசிகின்றன.. மேலும் காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து கே.எஸ்.அழகிரி மாற்றப்படாமல் இருந்தால் தமிழகத்தில் கட்சி பணிகள் முடங்குவதோடு பலர் வேலை செய்ய மாட்டார்கள் இதனால் உங்களது I.N.D.I.A கூட்டணி கட்சிகளுக்கு தான் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் கடிந்து கொண்டு உள்ளாராம்.

இவற்றைக் கேட்ட மல்லிகார்ஜுன கார்கே என்னிடம் கூறி என்ன ஆகப்போகிறது நேரடியாக ராகுலிடம் கூறுங்கள் என்று தெரிவித்ததாகவும் ராகுல் சந்திக்க மறுக்கிறார் அதனாலேயே உங்களிடம் கூறினேன் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு இது குறித்து முறைப்படி கோரிக்கை கடிதம் கொடுக்க திருநாவுக்கரசு எம்பி தயாராக உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இதன் பின்னணியை விசாரித்த பொழுது கேஎஸ் அழகிரி தமிழக காங்கிரஸின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழக காங்கிரஸில் எந்தவித முன்னேற்றமும் இல்லை, தேர்தலில் கூட பத்து சீட்டு எதிர்பார்க்கும் இடத்தில் இவர் ஐந்து சீட்டுகள் கொடுத்தால் கூட போதும் என திமுகவிடம் சமரசம் செய்து கொள்வார். மேலும் இவர் தலைவர் பதவியில் இருந்தால் திமுகவிற்கு தான் வேலை செய்வாரே தவிர காங்கிரஸ்சிற்கு செய்ய மாட்டார் என ரிப்போர்ட்கள் பறந்து உள்ளதாம். இதன் காரணமாகவே இவரை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றுவதற்காக துடியாய் துடிக்கிறார்களாம் இவரின் போட்டியாளர்கள், ஒரு புறம் விடுதலை சிறுத்தைகள் தனியாக பிரிந்து செல்ல தயாராகி வருகிறார் மறுபுறம் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி திமுகவிற்கு இடி போல் இறங்கி உள்ளதாம் ஆகவே கேஎஸ் அழகிரி மாற்றப்பட்டால் கண்டிப்பாக அதிக இடங்களை காங்கிரஸ் கேட்கும் அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என அறிவாலயம் டென்ஷனில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.