24 special

நம்பிக்கை துரோகம் செய்யும் திமுக அரசு... பாஜக தலைவர் அண்ணாமலை காட்டம்!

mk stalin, annamalai
mk stalin, annamalai

திமுக அரசு தேர்தலுக்கு வரும் முன் பல வாக்குறுதிகளை அறிவித்தது. ஆட்சிக்கு வந்த பின் முதலமைச்சர் அதனை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பாமர பொதுமக்களும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ஒரு வாரத்திற்கும் மேல் பல கோரிக்கைகளை வலியுறித்தி சென்னை DPI வளாகத்தில் வருங்கால மாணவர்களுக்கு கற்பித்து தரும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்களின் குரலை நசுக்கும் திமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மாநில பாஜாக தலைவர் அண்ணாமலை வலியறுத்தி உள்ளார். ஆசிர்யர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நேற்று டெல்லி சென்று திரும்பிய பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரவு அளிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பள்ளிக் கல்வித்துறையில் இசை, ஓவியம், தையல், உடற்பயிற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளில்,  சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்கள், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.


கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த போதும் இவர்களுக்கு இத்தனை ஆண்டு காலம், பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. கடந்த தேர்தலில், திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 181ல், “பள்ளிக் கல்வித் துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரைப் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று வாக்குறுதி கொடுத்திருந்தது.  ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்தும், பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.திமுகவின் நம்பிக்கைத் துரோகத்தை எதிர்த்து சென்னையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகப் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரிப் போராடி வருகிறார்கள். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களைக்,  கைது செய்யும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக ஊடகங்களில் வரும் செய்தி மூலம் அறிந்தேன், இது மிகுந்த கண்டனத்துக்குரியது. 

பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றி விட்டு, தற்போது ஆசிரியர்களின்  கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்கள் குரலை நசுக்க முயற்சிப்பதை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆசிரியப் பெருமக்களுடன் முறையான பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமான முடிவை எட்ட வேண்டும் என்று சார்பாக வலியுறுத்துகிறேன். இவரது அறிக்கை மூலம் ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் ஆசிரியர்கள் பேச்வரத்தை நடத்தினர். அதில் எந்த கோரிக்கைக்கும் தீர்வுகள் எட்டப்படவில்லை. பின் பேசிய ஆசிரியர்கள் திமுக தேர்தலில் நிற்கும் தொகுதிகளில் அவருக்கு எதிராக ஆசிரியர்கள் நின்று தோற்கடிப்பதாக தகவல் வெளியாகின. மேலும், அதிமுக, அமமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் திமுக அரசுக்கு எதிராக குரல் எழுப்பியும், ஆசிரியர்களின் பிரச்சனைக்கு  தீர்வு  காணாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.