புதுதில்லி : பாரத பிரதமர் மோடி அவர்களின் தாயாரின் 99 ஆவது பிறந்தநாளையொட்டி சில மறக்கமுடியாத பால்யகால நினைவுகளை பகிர்ந்துள்ளார். மேலும் மற்றவர்களின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சிகண்ட தனது தாயாரான ஹீரா பென் அவர்களை மனமார பாராட்டினார்.
இதுகுறித்து மேலும் அவர் விவரிக்கையில் " எனது அம்மா மற்றவர்களின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சியடைவார். எங்கள் வீடு சிறியதாக இருக்கலாம். ஆனால் அவர் மிக பெரிய மனதுடன் இருந்தார். எனது தந்தையின் நெருங்கிய நண்பர் பக்கத்து கிராமத்தில் வசித்துவந்தார். அவரின் மறைவுக்கு பிறகு எனது தந்தை அவரது நண்பரின் மகனான அப்பாஸை வீட்டிற்கு அழைத்து வந்தார்.
எங்கள் வீட்டிற்கு வந்த அப்பாஸ் எங்களுடனே தங்கி தனது படிப்பை முடித்தார். எனது தாயார் அப்பாஸ் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவர். நமது ஒவ்வொரு சகோதரருக்கும் செய்வது போல ஒவ்வொரு ஆண்டும் ஈத் அன்று அப்பாஸுக்கு விருப்பமான உணவுகளை தயாரித்து அவருக்கு பரிமாறுவார். ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் அண்டைவீட்டினர் எங்கள் வீட்டிற்கு வந்து எங்கள் தாயாரின் ஸ்பெசல் உணவுகளை ரசித்து சாப்பிடுவது வழக்கமான ஒன்று.
ஒரு சாது எங்கள் வீட்டின் வழியே செல்லும்போதெல்லாம் அவரை எங்கள் எளியவீட்டில் உணவருந்த அழைப்பார். அவரின் தன்னலமற்ற குணத்தால் உண்மையாக அவருக்கு எதுவும் கேட்பதைவிட குழந்தைகளாகிய எங்களை ஆசிர்வதிக்கவேண்டும் என சாதுக்களிடம் கோருவார். குழந்தைகளே என்னை ஆசீர்வதியுங்கள்.
மற்றவர்களின் மகிழ்ச்சியில் அவர் மகிழ்ச்சியாகவும் அவர்களுக்கு தெய்வபக்தி சேவை குணம் மென்மேலும் தொடரட்டும்" என பாரத பிரதமர் மோடி தனது தயார் ஹீராபென்னுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் காந்திநகர் இல்லத்தில் பிறந்தநாளான நேற்று தனது தாயாரை சந்தித்தார் பிரதமர் மோடி.