ஒரே நேரத்தில் இருவேறு கருத்துக்கள் கூறி கடும் சர்ச்சையில் சிக்கி இருப்பதுடன் அம்பலப்பட்டு போயிருப்பவர் திமுகவை சேர்ந்த சல்மா, இவர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான போது ஜோசப் விஜய் நடித்த பீஸ்ட் படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக குறிப்பிட்டார்.
அதாவது ட்ரைலர் காட்சியில் காவி நிற பேனர் ஒன்றை விஜய் கிழிக்கும் வகையில் இருப்பதால் அது பாஜகவிற்கு எதிரான குறியீடு என கொண்டாடி மகிழ்ந்த ஒரு சிலரில் சல்மாவும் ஒருவர், இந்த சூழலில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை முஸ்லிமாக காட்டி இருப்பதால் சல்மா நொந்து போய் அப்படியே விஜய்யின் பீஸ்ட் படம் குறித்து விமர்சனம் செய்து இருந்தார்.
இந்த சூழலில் விஜய் ரசிகர்கள் கவிஞர் சல்மாவை கழுவி ஊற்றி வருகின்றனர், வேறு சமூகத்திற்கு எதிராக படம் எடுத்தால் வரவேற்பது, உங்கள் சமூகத்திற்கு எதிராக காட்சி இருந்தால் விமர்சனம் செய்வது இதுதான் உங்கள் நடுநிலையா? நீங்கள் எல்லாம் பொதுவான அரசியல் கட்சியில் இருந்து என்ன சாதிக்க போகிறீர்கள்? வேண்டும் என்றால் உங்கள் மதத்திற்கு உரிய கட்சியில் சேர்ந்து கொள்ளவேண்டியது தானே?
ஷாருக்கான் மகன் போதை பொருள்கள் கடத்தல் வழக்கில் சிக்கிய போது சிறுவனை எத்தனை நாட்கள் சிறையில் வைத்து இருப்பார்கள் என இங்கிருந்து ஆதரவு தெரிவித்த நபர் தானே நீங்கள் 22 வயதை கடந்தவன் சிறுவனா? ஏன் குற்றவாளிக்கு அதுவும் கடத்தல் குற்றவாளிக்கு ஆதரவு கொடுத்தீர்கள் அவன் உங்கள் மதம் என்பதாலா? ஒரு திரைப்படம் என்றால் அனைத்தும் இருக்கும் ஆனால் படம் வெளிவரும் முன்னர் ஒரு பேச்சு படம் வெளிவந்த பின்னர் ஒரு பேச்சு என மாறி மாறி உங்களை போன்று பேசும் நபர்களை பார்த்தது இல்லை.
ஷாருக்கான் மகனின் பின்னால் இருக்கும் நியாயம் தெரிகிறது விஜயின் இத்தனை வருட திரை வாழ்க்கை அவர் எந்த மாதத்திற்கு எதிரானவர் இல்லை என உங்களுக்கு தெரியாதா? இல்லை அடுத்த தேர்தலில் நிற்க இப்போதே மத ரீதியிலான வாக்குகளை பெற பீஸ்ட் திரைப்படத்தை பயன்படுத்தி கொள்ள பார்க்கிறீர்களா? என கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.