24 special

அமைச்சர்களை தொடர்ந்து "அண்ணாமலையிடம்" வாங்கி கட்டிய முரசொலி..!

annamalai
annamalai

திமுகவின் அதிகாரபூர்வ நாளேடு முரசொலி அண்ணாமலை குறித்து விமர்சனம் வைக்க அதற்கு அண்ணாமலை கொடுத்த பதில் தற்போது புது விவாதத்தை உண்டாக்கியுள்ளது.முரசொலி நாளிதழில் வெளியான செய்தி ஒன்றில் பாஜக தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் படித்தவரா என கேள்வி கேட்டு அதற்கு அவர்களே பதில் ஒன்றையும் கொடுத்தனர் அது பின்வருமாறு :- கேள்வி: தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஐ.பி.எஸ்.படித்தவரா?பதில் :


எல்லாரும் அப்படித்தான் கூறினார்கள்; நாமும் இதுவரை நம்பிக் கொண்டிருந்தோம்!1959ஆம் ஆண்டு நம்பூதிரிபாட் ஆட்சியைக் கலைத்தவர்கள் யார் தெரியுமா? இந்திராகாந்தி அம்மையார் கலைத்தார்கள்; நாம் கலைத்தோமா எனப் பேட்டி ஒன்றில்கூறியுள்ள இந்தப் பேர்வழி எப்படி ஐ.பி.எஸ். தேர்வில் 'பாஸ்'செய்தார்? என்பதுதான் புரியத புதிர்!1959 ல் பிரதமராக இருந்தவர் யார் என்று கூடத்தெரியாத கூ முட்டைகள் எல்லாம் தங்களை ஐ.பி.எஸ்; ஐ.ஏ.எஸ் என்று கூறித் திரிந்து கொண்டு, ஒரு அரசியல்கட்சித் தலைவராக இருந்து பேட்டி கொடுப்பது கொடுமையிலும் கொடுமை அன்றோ  என விமர்சனம் செய்து இருந்தனர்.

இந்த சூழலில் அண்ணாமலை முரசொலியின் விமர்சனத்திற்கு அண்ணாமலை பதில் கொடுத்துள்ளார், தமிழில் தினசரி நாளிதழ் என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் டாய்லெட் துடைக்க தகுதியான செய்தித் தாள், தமிழ்நாட்டில் முரசொலி என்று அழைக்கப்படுகிறது.

இது அறிவாலயம் கட்சியின் தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள்.  கேரளாவில் ஈ.எம்.எஸ் நம்பூத்ரி அரசு ஏன் டிஸ்மிஸ் செய்யப்பட்டது என்பதற்கான எனது வீடியோவையும் நான் பேசியதற்கான ஆதாரத்தையும் பகிர்ந்துத்துள்ளேன் பார்க்கவும் என குறிப்பிட்டுள்ளார். திமுக அமைச்சரவையில் சிக்கிய அமைச்சர்கள்தாஅண்ணாமலையிடம் டேட்டாவை தவறாக குறிப்பிட்டு சிக்கி கொள்கிறார்கள் என்றால் தற்போது திமுகவின் அதிகார நாளிதழ் முரசொலியும் டாய்லெட் பேப்பர் என அண்ணாமலையிடம் போலியான தகவலை குறிப்பிட்டு சிக்கியுள்ளது.