24 special

OEF இன் குண்டுதுளைக்காத ஜாக்கெட் பாபா கவச்..!

Indian military
Indian military

அஸ்ஸாம் : கடந்த மாதம் சென்னை ஆவடியில் தயாரிக்கப்பட்ட குண்டுதுளைக்காத ஹெல்மெட் இந்திய ராணுவத்திற்காக தயாரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டது. அதேபோல குண்டுதுளைக்காத நவீன கவச உடைகள் வீரர்களுக்கு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடும்போது வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.


இந்நிலையில் டிசிஎல் மற்றும் மிதானியின் பாபா கவச் எனப்படும் குண்டுதுளைக்காத  ஜாக்கெட் கான்பூரில் அமைந்துள்ள OEF ( ORDANANCE EQUIPMENT FACTORY)  தொழிற்சாலையின் கான்பரன்ஸ் ஹாலில் வைத்து அஸ்ஸாம் காவல்துறையினரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இந்த விழாவில் OITC OEF வி.கே.சௌத்ரி கலந்துகொண்டார்.



அஸ்ஸாம் காவல்துறை கான்பூர் ஆயுத தொழிற்சாலைக்கு இதே விழாவில் 164 குண்டுதுளைக்காத உடைகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஜாக்கெட் முன்பக்கமும் பின்பக்கமும் 360 டிகிரி சூரிய வெப்பத்தை தாங்கவல்லது. இந்த ரக ஜாக்கெட்டுகள் BIS லெவல் V மற்றும் NIJ லெவல் III + ஆகியவற்றை எதிர்க்கும் திறன்கொண்டது. 

இதனால் ஆயுதப்படைகள் தாக்குதலின்போது எதிரிகளை திறம்பட சமாளிக்க முடியும். இந்த வகை ஜாக்கெட்டுகள் ஹார்ட் ஆர்மர் பேனல் மற்றும் சாப்ட் ஆர்மர் பேனல் என்ற இருவகையான ரா மெட்டீரியலால் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஜாக்கெட்டுகளில் இரண்டு கையெறிகுண்டு பாக்கெட்டுகள் இரண்டு பேப்பர் பாக்கெட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

தோள்பட்டை இடுப்பு மற்றும் நெஞ்சுப்பக்கம் சரிசெய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜாக்கெட்டுகளின் எடை சுமார் 9.3 கிலோ முதல் 9.6 கிலோ வரை இருக்கும் என கூறப்படுகிறது. விரைவில் அனைத்து மாநிலங்களிலும் இந்த ஜாக்கெட் காவல்துறையினருக்கு வழங்கப்படும் எனவும் மாநில முதலமைச்சர்களின் முடிவை பொறுத்தே அது அமையும் என கான்பூர் ஆயுத தொழிற்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.