பதிவு - ஸ்ரீதர் சுப்பிரமணியம் நயன்தாரா, விக்கி திருமண நிகழ்வை ஒளிபரப்ப நெட்பிளிக்ஸ் நிறுவனம் கோடிகளில் கொடுத்து உரிமம் வாங்கி இருக்கிறது என்ற செய்தி பரவலாக விமர்சிக்கப்படுகிறது.
செலிப்ரிட்டிகளின் குடும்ப நிகழ்வுகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுவதும் அதற்கு அந்த சானல்கள் மில்லியன்களில் கொடுப்பதும் ரொம்ப காலமாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நடந்து வருகின்றன. அதற்கு முன்பு பத்திரிகைகளில் பிரத்தியேகமாக கல்யாண ஃபோட்டோ போடுவதற்கு பணம் கொடுப்பார்கள்.
குழந்தைப் பேறுக்குக் கூட குழந்தையின் ஃபோட்டோவை போடுவதற்கு பணம் கொடுத்து பிரத்தியேகமாக பத்திரிகைகள் உரிமம் பெற்ற வரலாறு இருக்கிறது. தமிழ் நாட்டில் தங்களது செலிப்ரிட்டி அந்தஸ்தை நடிக நடிகைகள் இன்னமும் முழுமையாக பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை. அது விக்கி-நயன் திருமணத்தில் ஆரம்பித்திருக்கிறது என்பது நல்ல முன்னேற்றம்.
இந்த இருவரின் காதல் கதை பெரும் ஆர்வத்துடன் தென்னிந்தியர்களால் பின் தொடரப்பட்டு வந்திருக்கிறது. இன்ஸ்டகிராமில் இவர்கள் இருவரும் இணைந்து பதியும் ஃபோட்டோக்கள் லட்சக்கணக்கானவர்களால் லைக் செய்யப்பட்டு வந்தது. அந்த ஃபோட்டோக்களுக்குக் கூட இன்ஸ்டகிராம் இவர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டு இருந்திருக்கும். இப்போது நெட்பிளிக்ஸ் ஒளிபரப்பு வரை வந்திருக்கிறது.
ஹனிமூன் ஃபோட்டோக்களை பிரத்தியேகமாக பகிர்வதற்கும் கூட இன்ஸ்டகிராம் அல்லது டிவிட்டர் யாராவது அதிக தொகை கொடுத்து உரிமம் பெற்றிருக்கலாம்.
'If you've got it, flaunt it' என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை இருக்கிறது. நீங்கள் உழைத்துப் பெற்ற ஒன்றை நீங்கள் பிரச்சாரம் செய்து பீற்றிக்கொள்வதில் தவறே இல்லை. இப்போது நெட்பிளிக்ஸ்சோ, இன்ஸ்டகிராமோ கொடுக்கும் அங்கீகாரம் நயன்தாரா தனது கடின உழைப்பால் அடைந்திருக்கும் இடம்.
அந்த உழைப்பை மேலும் அறுவடை செய்து கொள்கிறார். அவ்வளவுதான். அந்த வெற்றியை மகிழ்வுடன் வாழ்த்துவோம். விக்கி-நயன் தம்பதிகளுக்கு திருமண நல் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீதர் சுப்பிரமணியம்.