தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்வாமிகளை சந்தித்த போது அவமானப்படுத்தப்பட்டதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை உண்டாக்கியது. அவருக்கு தரக்கூடிய பொன்னாடையை கையில் கொடுக்காமல், வீசி எறிந்துவிட்டார் என்பது தான்
அனைவரின் குற்றச்சாட்டு. பொதுவாகவே, சன்னியாசிகள் எல்லாம் துறவிகள். யாரையும் தொடுவது இல்லை. பெண்கள் என்றால் தொட வாய்ப்பே இல்லை. அதனால் தான் பொன்னாடையை அந்த விதமாக கொடுத்து இருக்கிறார் .
இதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதை பேச வேண்டியவர் டாக்டர் தமிழிசை தான். சமயத்தின் முறையையும், மடத்தின் சம்பிரதாயத்தையும் நன்கு அறிந்தவர் என்பதால் தமிழிசை இதை பிரச்னையாக்க வில்லை. எல்லா விஷயத்தையும் சமூக நீதி என்ற அளவுகோலை கொண்டு பார்ப்பது வேதனை. பள்ளிக்கு போகிற மாணவனை, கடுஞ்சொல் சொல்லியோ, அவசியம் ஏற்பட்டால் ரெண்டு தட்டு தட்டியோ அடிக்க வேண்டியது தாயாரின் கடமை. இதில் சமூக நீதி கேட்க முடியுமா? இதை போல தான், ஆனமீகமும். எப்படி பார்த்தாலும், குரு என்பவரோ...ஆன்மீக அமைப்பின் தலைவர் என்பவரோ, அவர்களுடைய சீடர்களை விட மேன்நிலையில் வைத்து தான் பார்க்க பட வேண்டும்.
ஒரு நிகழ்ச்சியை சொல்கிறேன். 1967 ஆவது வருடம் நடந்த பொது தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம், சட்டமன்றத்தில் பெரும்பாண்மை பெற்று, கட்சியின் தலைவர் சி.என். அண்ணாதுரை தென் சென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே. காமராஜரை, விருதுநகர் சட்ட மன்ற தொகுதியில் சீனிவாசன் என்ற மாணவர் தோற்கடித்தார்.
முடிவுகள் வெளிவந்த பிறகு, நுங்கம்பாக்கத்தில் இருந்த அண்ணாவின் வீட்டுக்கு, சீனிவாசன் போனார். அங்கே கூடி இருந்த பத்திரிக்கியாளர்கள், அண்ணாவின் அருகில் சீனிவாசனை உட்கார வைத்து, படம் பிடிக்க விரும்பினார்கள். ஆனால் அங்கிருந்த மு.கருணாநிதி ( திமுக பொருளாளர்) படம் எடுக்க விடாமல், தடுத்து விட்டார் "அண்ணாவின் பக்கத்தில் நாங்களே உட்காருவது இல்லை. இவனை எப்படி உட்கார வைப்பது " என்பது தான் அவருடைய அப்ஜெக்ஷன்.
கலைஞர் கருணாநிதி செய்தால் OK ? காஞ்சி மேடம் செய்தால் NOT OK வா? - திராவிட மாயை சுப்பு. இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார் திராவிட மாயை சுப்பு.
இங்கு மற்றொரு விஷயத்தையும் மேற்க்கோள் காட்ட வேண்டி இருக்கிறது. அதாவது, பட்டியலின மக்கள் பொது தொகுதியில் போட்டியிட வேண்டும் என கேட்பதே தவறு என்று சொன்னவர் கலைஞர். இதை வெளிப்படையாக தொலைக்காட்சியில் போட்டு உடைத்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் வன்னியரசு என்பது குறிப்பிடத்தக்கது.