தமிழ் சினிமா மட்டும் இன்றி எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் இரு காதலர்கள் இணைவதற்கு பல போராட்டங்கள் இருந்திருக்கும் எளிதாக நடைபெற்றாலும் அதற்கு பிறகு அவர்கள் அந்த வாழ்க்கையில் எப்படி முன்னேறி வருகிறார்கள் என்பது குறித்த படத்திலும் அந்த தம்பதிகள் அதிக கஷ்டத்தை தாண்டி உயர்வதை காண்பிப்பார். அதே சமயத்தில் ஒரு காதலர் தன் காதலியை கரம்பிடிப்பதற்கு பல போராட்டங்களை சந்தித்து இருப்பார். நிஜத்தில் இதெல்லாம் நடக்குமா? என்ன கதை? என்று கூட சிலர் சினிமாவில் வரும் சில கருத்துக்கள் மற்றும் கதைகளை கிண்டல் அடிப்பார்கள் ஆனால் நிஜத்திலும் இது போன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்து வருகிறது அதிலும் குறிப்பாக பிரபலமாக இருக்கும் ஒருவருக்கு இது போன்ற சம்பவம் நடந்தது பலரால் பேசப்பட்டது. அதாவது தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்த விஜே மணிமேகலை 90ஸ் கிட்ஸ் மட்டும் டூ கே கிட்ஸ் ஃபேவரிட்டான தொகுபாளினி! இவர் ஒரு முறை நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் உடன் நடனமாடிய ஒரு டான்சரை பார்த்து காதல் வயப்பட்டு பிறகு இருவரும் முழு மனதுடன் காதலிக்க ஆரம்பித்தனர்.
ஆனால் இவர் களின் காதலுக்கு இரு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்ப இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு மணிமேகலை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பணியாற்றாமல் சிறிது காலம் இருந்து வந்தார் மணிமேகலை பிறகு பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகப்பட்ட குக் வித் கோமாளி என்ற ஷோவில் கோமாளியாக பணியாற்ற ஆரம்பித்தார். இந்த ஷோ அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது அவரது காமெடி பலரது மனதையும் குளிர் வித்தது. முன்னதாக இதே தொலைக்காட்சியில் நடைபெற்ற மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரையிலும் பங்கு பெற்று தன் திருமணம் எப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அதெல்லாம் நடக்காமல் திடீரென்று யாராவது வந்து விடுவார்கள் என்ற பயத்தில் தாலி கட்டிய தருணத்தை பெற்றதாக வேதனையுடன் தெரிவித்தார். மேலும் அவரது ஆசைகள் அனைத்தும் அந்த ஷோ மூலம் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி கொரோனா காலகட்டத்திலும் யூட்யூபில் அதிக வீடியோக்களை வெளியிட்டு தனது பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார். இதனால் அவருக்கு இழந்த வாய்ப்புகள் மீண்டும் கிடைக்க ஆரம்பித்தது.
மேலும் பல நிகழ்ச்சிகளில் யூட்டுயூப் சேனலில் எனக்கு கிடைக்கும் வருமானத்தை விட விஜய் டிவி குறைவான வருமானத்தையே கொடுக்கிறதாக கூறியிருக்கிறார். இந்த நிலையில் மணிமேகலை திடீரென்று கடந்த சீரியலில் இனி நான் கோமாளியாக நடிக்க போவதில்லை என்று கூறி நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதற்கு பிறகு மீண்டும் அதே நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்ற ஆரம்பித்தார். ஆனால் இந்த ஒரு வருட காலத்தில் தனக்கு பெரும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் அதனால் வருமானமும் இல்லாமல் வீட்டுக்காக எடுத்த லோன் கூட கட்ட முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என சமீபத்தில் ஒரு பேட்டியில் மணிமேகலை கூறியது தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு பல கஷ்டங்கள் மற்றும் போராட்டங்களை சந்தித்த மணிமேகலை மற்றும் உசைன் தம்பதி விஜய் டிவி மற்றும் மற்ற துறைகளில் இருந்து கிடைத்த வாய்ப்புகளால் கார் வாங்கினார்கள் பிறகு வீடு கட்டும் அளவிற்கு முன்னேற ஆரம்பித்தார்கள். இதனால் இவர்களை அடுத்து சூரிய வம்சம் தம்பதி என்றும் பலர் பிரமித்து பார்த்து வந்த நிலையில் இப்படி வீட்டு லோன் கூட கட்ட முடியாத நிலைமை உள்ளது என்று மணிமேகலை தனது வருத்தத்தை தெரிவித்திருப்பது பலரது கவனத்தை பெற்றுள்ளது.