டெல்லி திகார் சிறையில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் சத்தேந்திர ஜெயினுக்கு பாடி மசாஜ் அளிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் இவர் மீது கடந்த 2017 ஆம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சிபிஐ வழக்கு தொடுத்தது. அதன்படி 4 கோடியே 51 லட்சம் ரூபாயை அமலாகத்துறை முடக்கியது. தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவருக்கு முன் ஜாமீன் வழங்கவும் நீதிமன்றம் மறுத்தது.
இப்படியான நிலையில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி பதிவாகியுள்ள ஒரு வீடியோவில் இவருக்கு கை கால் விரல்களுக்கு ஆயில் மசாஜ் செய்வது போல ஒரு வீடியோ பதிவாகி இருக்கின்றது அதேபோன்று செப்டம்பர் 14ஆம் தேதி பதிவான வீடியோவில் கால் அழுத்தி விடுவது போன்று ஒரு வீடியோவும் வெளிவந்திருக்கின்றது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 21 ஆம் தேதி பதிவான வீடியோவில் நான்கு பேர் அவர்களுடன் இருப்பது போன்று ஒரு வீடியோ வெளிவந்திருக்கின்றது.
இந்த அனைத்து விஷயங்களையும் பாரத ஜனதா கட்சியின் ஐடி விங் தலைவர் அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில், "திகார் சிறையை மசாஜ் பார்லராக மாற்றியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். திகார் சிறையை நிர்வகிப்பது டெல்லி அரசு" என குறிப்பிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது நாடு முழுக்க மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஆம் ஆத்மி கட்சியை பொறுத்த வரையில் ஊழலுக்கு எதிரான கட்சி, ஊழலே இல்லாத ஆட்சி என தொடர்ந்து பேசிக் வரும் தருணத்தில் டெல்லியில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் ஆம் ஆத்மீ கட்சி தற்போது என்ன வேலை செய்து கொண்டிருக்கிறது? ஒரு பக்கம் ஊழலுக்கு எதிரான வாய்ஸ் கொடுப்பது.. இன்னொரு பக்கம் தன் சொந்தக்கட்சிகாரரான திகார் சிறையில் இருக்கும் ஜெயினுக்கு சகல சவுபாக்ய வசதியையும் செய்துக்க கொடுத்திருப்பதை ஆம் ஆதி கட்சியை மக்கள் கேள்வி கேட்க தொடங்கி கடும் விமர்சனத்தை முன் வைத்து உள்ளனர்.