தமிழக அரசியல் புது வடிவத்தை எட்டி இருக்கிறது எந்த முறையும் இல்லாத அளவாக பாஜக தமிழகத்தில் பிசாசு போல வளருகிறது என திமுக பொது செயலாளர் துரைமுருகன் பேசியது பெரும் தாக்கத்தை ஊடகங்கள் மத்தியில் உண்டாக்கிய நிலையில் தற்போது துரை முருகன் என்ன கூறினாரோ அவர் பேசி 24 மணி நேரம் கடப்பதற்குள் அது நடந்தே விட்டது .
காட்பாடியில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துரைமுருகன்,நாம் ஆட்சிக்கு வந்ததும் முதியோர் பென்ஷன் இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், நிதி இலாகாவில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
அதிகாரிகள் பலர் எங்கள் வழியில் நிற்கவில்லை. சில அதிகாரிகளுக்கு நாம் வந்ததே இன்னும் பிடிக்கவில்லை. அவர்களை நாங்கள் வெறுக்க முடியாது. அந்த நிலையை எல்லாம் மாற்ற வேண்டும். பொங்கலுக்கு வழங்கிய பொருட்கள் சரியில்லை என்றார்கள்.
இந்த முறை வேறு மாதிரி செய்துள்ளோம். இந்தமுறை சேதாரம் இல்லாமல் ஒழுங்காக இருக்கும். ஒரு பிடிஓவிடமே நீங்கள் இவ்வளவு பாடு படுகிறீர்கள் என்றால் நாங்கள் எப்படி பாடுபடுவோம்? நீங்களும் நாங்களும் இல்லாமல் ஆட்சி இல்லை.
இந்த ஆட்சி வந்து ஒன்றரை வந்து ஆண்டாகிறது. அந்த லகான் எங்களிடம் சரியாக வரவி்ல்லை. ஆளுநர் வேறு லகானை பிடித்துக்கொண்டார். இல்லாவிட்டால் எவ்வளவோ செய்திருப்போம்” என்று மிகவும் ஆதங்கமாக பேசினார் துரைமுருகன்.
இந்த நிலையில் முக்கிய IAS அதிகாரி ஒருவர் தமிழகத்தில் முக்கிய துறை ஒன்றில் சமீபத்தில் கொடுக்கப்பட்ட டென்டர் முறைகேடு குறித்து விளக்கமாக பக்கம் பக்கமாக ஆதாரத்துடன் பதிவு செய்து எங்கு அனுப்ப வேண்டுமோ அங்கு அனுப்பி விட்டாராம், இதில் அந்த துறை தவிர மற்ற அமைச்சர்களுக்கும் அதனால் பெரும் வில்லங்கம் வரும் என்பதால் இப்போதே பல முக்கிய அமைச்சர்கள் மறைமுகமாக விமர்சனமும் வைக்க... அமைச்சர்களுக்குள் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறதாம்.
துரைமுருகன் தங்களுக்கு முழுமையாக அதிகாரிகள் ஒத்துழைப்பது இல்லை எனவும், ஆளுநர் வேறு லகானை வைத்து இருக்கிறார் என வெளிப்படையாக பேசிய நிலையில், முக்கிய துறை குறித்து பல்வேறு ஆதாரங்களை ஆளுநர் மாளிகை முதல் டெல்லி வரை அனுப்பி இருக்கும் செய்தி தான் இப்போது பல்வேறு துறை அமைச்சர்களையும் அதிகாரிகளையும் ஆட்டம் காண செய்து இருக்கிறதாம்.
துரைமுருகன் பாஜக பிசாசு போல வளருகிறது, அதிகாரத்திலும் பண பலத்திலும் தங்களுக்கு இணையாக மோதுவார்கள் என சொல்லி 24 மணி நேரம் கடப்பதற்குள் ஒரு முக்கிய அதிகாரி ஒருவர் ஆதாரங்களை முக்கிய நபரிடம் சமர்ப்பித்து இருக்கிறார் என்கின்ற தகவல் துரைமுருகன் சொல்வதை மெய்பித்து இருக்கிறது.
பல அமைச்சர்கள் இப்போது தங்களுக்குள் விமர்சனம் செய்வது இதன் தொடர்ச்சிதான் என்கின்றன அரசியல் அறிந்தவர்கள். அடுத்த வீடியோகளில் பாஜகவின் மெகா பிளான் 2024 குறித்து வெளியிட இருக்கிறோம் மறக்காமல் நமது TNNEWS24 பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.