24 special

ஒருதலை பட்சமான காவல்துறை..? அண்ணாமலையின் பரபரப்பான விளக்கம்..!

Annamalai, Stalin
Annamalai, Stalin

கோவை நாடளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலை மற்றும் காவல்துறை இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது இது தொடர்பாக பாஜகவினர் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் கொடுத்துள்ளார். 



நாடாளுமன்ற தேர்தல் தொடங்க இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில்,  இரண்டு நாட்கள் முன்னதாக பிரச்சாரம் செய்வதை நிறுத்தும் விதிமுறைகள் மற்றும் இரவு 10 மணி வரை மட்டுமே பிரச்சாரம் செய்யமுடியும் அதனை மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை பாயும்.. இதனால் களத்தில் அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வருவதால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை நேற்று இரவு பிரச்சாரத்தை முடித்து கொண்டு இரவு வீடு திரும்பும் போது, போலீசார் அவரை தடுத்து நிறுத்தியது பரபரப்பாக சென்றது.


கோவை தொகுதியை உற்று நோக்கும் அனைவரும் அண்ணாமலையின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்று கோவை சூலூரில் அண்ணாமலை மற்றும் பாஜகவினர் காரில் பயணித்தனர். அப்போ வழிமறித்த காவல்துறையினர் இரவு 10 மணியை கடந்து விட்டதால் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினர். அப்போது அண்ணாமலை தான் பிரசாரம் செய்யவில்லை. பிரசாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு தான் செல்கிறேன் என தெரிவித்தார். ஆனால், காவல் துறையினர் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தினர். 


இதனால் அண்ணாமலை காவல் துறையினரிடம் தான் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளாத நிலையில் போலீசார் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும் பாஜகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பாக சென்றது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அண்ணாமலை தனது இணையப்பக்கத்தில், அற்ப காரணங்களுக்காக இன்று மீண்டும் எங்கள் பிரசார வாகனத்தை போலீசார் நிறுத்தினர். இதன்மூலம் திமுக அரசின் அத்துமீறல்கள் எல்லை மீறியுள்ளன.

                                                              

போலீசாரின் செயல் என்பது தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இதுபற்றி போலீசிடம் விளக்கியும் கூட அவர்கள் மாற்று வழியில் செல்லும்படி கூறினார்கள். ஏப்ரல் 19ம் தேதி நடக்கும் தேர்தலில் 3 ஆண்டு காலமாக தவறான ஆட்சி வழங்கி வரும் திமுகவை மக்கள் ஏற்க மறுத்து மக்கள் தங்களின் கோபத்தை காட்டுவார்கள்'' என தெரிவித்துள்ளார். கோவை தொகுதியில் பாஜகவின் வாக்கானது கணிசமாக அதிகரித்துள்ளது இதன் காரணமாகவே திமுக கட்சி அண்ணாமலைக்கு இப்படியான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஜூன் நான்கு பிறகு மக்கள் இந்த அரசுக்கு பாடம் புகுட்டுவார்கள் என அண்ணாமலை கூறியது குறிப்பிடத்தக்கது.