24 special

டிரக்ஸ் முன்னேற்ற கழகம்..! மத்திய அரசை குற்றம் சாடி வரும் திமுகவிற்கு ஷாக் கொடுத்த நிதி அமைச்சர்..!

MKSTALIN, NIRMALA SITHARAMAN
MKSTALIN, NIRMALA SITHARAMAN

2014, 2019 என கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக தனது ஆட்சியை நிலைநாட்டி வந்த நிலையில் 2024 மீண்டும் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டது அதாவது மக்களுக்கு வேண்டிய நலன் திட்டங்கள் இளைஞர்கள் பெண்கள் விவசாயிகள் ஏழை மக்கள் என ஒவ்வொருவருக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் சேர்ந்து அவற்றை நாட்டின் கடைகோடியில் உள்ள மக்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு மேற்கொண்டு வந்தது. அதே சமயத்தில் பல வரலாற்று சாதனைகள் மற்றும் நிகழ்வுகளையும் கடந்த 10 வருடங்களில் பாஜக தலைமையிலான மோடி அரசு மேற்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள திமுக மத்திய அரசிற்கும் மக்களுக்கும் இடையேயான ஒரு பெரும் பிளவு ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை அவ்வப்போது செய்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர் அதற்கு ஏற்றார் போல் உலகமே கண்டு மகிழ்ந்த அயோத்தி கும்பாபிஷேக விழாவின் நேரடி காட்சிகளை தமிழகத்தில் ஒளிபரப்பாமல் தடை செய்தது. மேலும் பல அரசியல் பிரமுகர்கள் தலைவர்கள் நிர்வாகிகள் பிரபலங்கள் என அனைவருமே அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது குறிப்பு தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வந்த நிலையில் அதையும் விமர்சனம் செய்யும் வகையிலான கருத்துக்களை திமுகவின் முக்கிய அமைச்சர்கள் தெரிவித்ததும் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 


                                                                                                       

இதனை அடுத்து சென்னை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மழையால் பெரும் பாதிப்பையும் இழப்புகளையும் சந்தித்துக் கொண்டிருந்த பொழுது திமுக அமைச்சர்கள் மற்றும் முதல்வர் கூட தமிழக மக்களை கவனிக்காமல் தன் கூட்டணியை தக்க வைத்துக் கொள்ள டெல்லி சென்றதும் பெரும் பரபரப்பையும் திமுகவின் பின்னடைவை மக்கள் மத்தியில் மேலும் ஏற்படுத்த காரணமாக அமைந்தது. ஆனால் அதற்கும் திமுக மத்திய அரசின் குற்றம் கூறியதோடு நிவாரண நிதி வழங்கவே இல்லை என்ற வகையிலான பொய் பரப்பரைகளை மேற்கொண்டு வந்தது. அதனையே கடைப்பிடித்து தற்போது தேர்தல் பிரச்சாரங்களிலும் மத்திய அரசின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை மட்டுமே முன் வைத்து வருகிறது. இதற்கிடையில் கச்சத்தீவு விவகாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் செய்த குளறுபடியையும் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டது திமுகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது ஆனால் அதற்கும் இதுவரை எந்த பதிலும் கூறாமல் திமுக மலுப்பும் வகையில் மௌனம் சாதித்து வருகிறது.         

                                                                                                       

அதுமட்டுமின்றி திமுகவின் அமைச்சர்கள் பிரச்சாரத்திற்காக ஒவ்வொரு பகுதிக்கு சென்றாலும் அப்பகுதியில் உள்ள மக்கள் அவர்களிடம் கேள்விகளை மட்டுமே முன்வைத்து திருப்பி அனுப்பி வருகிறது. மேலும் திமுகவின் நிர்வாகியாக இருந்து போதை கடத்தல் கும்பலின் தலைவனாகவும் ஒருவர் இருந்துள்ளார் என்ற செய்தியும் வெளிவந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி திமுகவிற்கு பின்னடைவான சூழ்நிலையும் அதை மழுப்ப மத்திய அரசை நோக்கி பல கேள்விகளையும் முன்வைத்து வரும் திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல் முருகனை ஆதரித்து நீலகிரியில் பிரச்சாரம் மேற்கொண்ட பொழுது, குடும்ப அரசியல் என்று என்னை திட்ட வேண்டாம் ஏனென்றால் மக்களை இதனை ஆதரிக்கிறார்கள் என முதல்வர் பேசுவதாகவும் ஆனால் நாடு முழுவதும் உள்ள மக்களே பிரதமரின் குடும்பம் என்று கூறினார்.

                                                                                            

மேலும் திமுக தங்களுடைய சுய லாபத்திற்காக மதுவை வளர்த்து போதைப்பொருளையும் விற்று குடும்ப நலனை காத்து வருகிறது, அதனால் திராவிட முன்னேற்றக் கழகம் எனப்படுகின்ற டிரக்ஸ் முன்னேற்றக் கழகத்தை விரட்டுவோம் ஏப்ரல் 19ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசியுள்ளார் இது தற்போது இணையங்களில் படுவைரலாக பரவி வருகிறது மேலும் ஒட்டுமொத்த கட்சிக்கு நிதி அமைச்சர் ஏற்ற பெயரை வைத்துள்ளார் என்ற வகையில் கமெண்ட்கள் முன்வைக்கப்படுகிறது.மேலும் இந்த விவகாரத்தை வைத்து பாஜக முறையான ஸ்கெட்ச் போட்டுள்ளது எனவும் வேறு அரசியல் விமர்சகர்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.