
விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் போன்ற தொகுதிகளை உள்ளடக்கியது தென் சென்னை! மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களையும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும் கொண்டுள்ள இந்த தொகுதி படித்தவர்களை அதிக எண்ணிக்கையில் கொண்டது. வெளிமாநிலத்தவர் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் அதிக அளவில் வசித்து வரும் அதிக அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட தொகுதியும் தென் சென்னை தொகுதி! ஆனால் இப்பகுதியில் குடிநீர் இணைப்புகள் கழிவுநீர் இணைப்புகள் வழங்குவதில் இன்னும் சிக்கல் உள்ளதாகவும் பெரும்பாலான பகுதிகளில் கழிவுநீர் இணைப்புகள் இதுவரை வழங்கப்படாமல் இருப்பதும் தென் சென்னை பகுதியில் முக்கிய சிக்கலாக உள்ளது. அதுமட்டுமின்றி மழை நீர் வடிகால் மற்றும் கழிவு நீர் பாதைகளுக்கான பணிகள் அனைத்தும் மந்த நிலையிலேயே இருப்பதாக அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக வேளச்சேரி விருகம்பாக்கம் தியாகராய நகர் சைதாப்பேட்டை போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் எப்போதுமே அதிகமாக இருப்பதாகவும் அதனை தீர்ப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. இப்படி அன்றாடம் மற்றும் அவசிய தேவைகள் அனைத்தும் நிறைவடையாத இந்த தொகுதியில் சமீபத்தில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை பாதிப்பும் பெருமளவில் இருந்தது அதிக மக்களும் அதிக குடும்பங்கள் வசிக்கும் இந்த தொகுதிகள் முழுவதுமே மழைநீரில் மூழ்கியதாகவும் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்து அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் தத்தளித்த நிலையில் சந்தித்ததாக தென் சென்னை பகுதி மக்கள் அரசின் மீது கடும் அதிருப்தியை தெரிவித்தனர். இதனால் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை பகுதி மக்கள் இனி அடுத்து திமுகவிற்கு வாக்களிப்பார்களா என்றால் பெருத்து கேள்விக்குறி தான்! ஏனென்றால் அந்த அளவிற்கு அதிருப்திகளை திமுக அரசிற்கேதிறாக அப்பகுதி மக்கள் முன் வைத்தனர். மழை பாதிப்பின் பொழுது அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காமல் மழை நீரில் தத்தளிக்க விட்டு வடிகால் பணிகளில் மந்த நிலையை காட்டி வந்த திராவிட மாடலை இப்பகுதி மக்கள் கேள்வியால் கிழித்து தொங்க விட்டனர்.
இப்படி தென் சென்னை முழுவதுமே திமுக பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் அந்தத் தொகுதி எம்பி முழு அலங்காரத்துடன் ஒரு சினிமா நடிகை போன்று ஒப்பனைகளை செய்து அலங்கரித்துக் கொண்ட வீடியோவை இணையங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து தென் சென்னை மக்கள் அனைவரும் இங்கு திமுகவை நோக்கி அதிருப்திகளையும் குற்றங்களையும் முன்வைத்து வருகின்றனர், ஆனால் தென் சென்னை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் போட்டோ ஷூட் மற்றும் தன்னை நடிகை போல் அழகுபடுத்துக் கொண்டு வீடியோ எடுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் ஆக மொத்தம் 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் திமுகவின் தலைமை மற்றும் அறிவாலய குடும்பத்திற்கு மட்டுமே முக்கியம் திமுகவை சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தேர்தலை குறித்த கவலை இல்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனால் கடுப்பபேரிய அறிவாலயம் இனி அடுத்த தேர்தலில் சீட்டு கேட்டு வாருங்கள் அப்பொழுது இருக்கு உங்களுக்கு என்று தென் சென்னை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான தமிழச்சி தங்க பாண்டியனை கடித்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.