24 special

ஹோட்டலுக்கு போறீங்களா...! அப்போ உஷார்....!

food issue , veg food
food issue , veg food

வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நவீன காலத்திற்கேற்ற வகையில் அனைவரும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். இதில் உணவு என்பது நமது அன்றாடத் தேவையும் தாண்டி நம் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமாக பயன்படுத்தப்படும் ஒரு சக்தியாக உள்ளது. முன்பெல்லாம் ஹோட்டல் உணவுகளை உண்ண வேண்டும் என்றால் வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை குடும்பமாக சென்று வருவார்கள் அதை தவிர வீட்டில் ஏதேனும் விசேஷங்கள் என்றால் கூட சமைப்பதற்கு ஆட்களை வரவைத்து வீட்டிலே சமைத்து விருந்தளிப்பார்கள் அந்த அளவிற்கு ஹோட்டலை புறக்கணிப்பதே கடந்த சில வருடங்களுக்கு முன்பு வழக்கமாக இருந்தது ஆனால் இன்று தினமும் காய்கறிகளை வாங்குவதற்கு கடைக்கு செல்வது போல தினமும் ஹோட்டலுக்கு சென்று உணவுகளை வாங்கி வந்து உண்ணுகிறார்கள். வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் ஹோட்டலுக்கு சென்று வந்த குடும்பங்கள் தற்பொழுது மாதத்தில் குறைந்தபட்சம் 5 முறையாவது ஹோட்டலுக்கு சென்று உணவு உண்டு வருகிறார்கள் இதனை ஒரு மாறுபட்ட கலாச்சாரம் என்றும் அதிலும் குறிப்பாக குடும்பத்தையும் வேலையையும் சமாளித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு ஒரு நாள் ஒரு வேளை உணவு சமைக்காமல் இருப்பது மிகப்பெரிய விடுதலையாக உள்ள காரணமாகவே ஹோட்டலை அதிக அளவில் தற்பொழுது வரவேற்று வருகின்றனர். 


மேலும் தற்பொழுது வேலைக்காக ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்கு இடம்பெயர்ந்து ஹாஸ்டல் மற்றும் தனி வீடுகளில் தங்கி வரும் இளைஞர்கள் தங்களது முழு நேர உணவிற்கும் ஹோட்டலையே நாடி செல்கின்றனர். அதோடு தற்பொழுது ஹோட்டல் உணவுகள் வீட்டிற்க்கே வந்து டெலிவரி செய்யும் அளவிற்கான வசதிகள் மேம்பட்டு இருப்பதால் இந்த வசதிகள் அனைத்தும் இளைஞர்கள் அனைவரையும் சமைக்க வேண்டும் என்ற முயற்சியை எடுக்க விடாமல் தடுத்து வீட்டில் அமர்ந்தபடியே மொபைல் போன் மூலம் என்ன உணவு வேண்டுமோ அதனை ஓரிடத்தில் அமர்ந்து கொண்டே ஆர்டர் செய்து சூடாக சாப்பிட்டு மகிழ்கின்றனர். அதுமட்டுமின்றி நண்பர்கள் குழுவில் யாரேனும் ஒருவருக்கு பிறந்தநாள் என்றாலும் அல்லது திருமணம் போன்ற எந்த ஒரு புது செய்தி கிடைத்தாலும் அதை மகிழ்விப்பதற்கு ஹோட்டலுக்கு சென்று கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த ஹோட்டல் உணவுகளால் நமது உடல் சிறிது சிறிதாக பாதிப்பை சந்தித்து வருகிறது. அங்கு சுவைக்காக போடப்படும் சில ஆர்ட்டிஃபிஷியல் பொருள்கள் அனைத்தும் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது என்பது பெரும்பாலும் ஹோட்டல் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது. 

அதுமட்டுமின்றி பெரிய பெரிய ஹோட்டல்களில் தரம் நன்றாக இருக்கும் என்று மக்கள் அவற்றை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் ஆனால் அங்கு எப்படி உணவை தயாரிக்கிறார்கள் எப்படி நாம் உண்ணும் பாத்திரங்களை சுத்தம் செய்கிறார்கள் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் நமக்கு தெரிவதில்லை உணவு பரிமாறப்படும் மற்றும் உணவு உண்ணும் இடம் மட்டும் சுத்தமாக இருந்தால் போதுமா அந்த உணவு தயாரிக்கப்படும் இடம் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் மற்றும் உண்ணும் பாத்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் சுத்தம் செய்ய வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கும் ஆனால் அந்த ஒரு எதிர்பார்ப்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் கேள்விக்குறியாகி உள்ளது. அதாவது சென்னையில் உள்ள பிரபல தனியார் சைவ ஹோட்டலின் பின்புறத்தில் ஹோட்டலின் பணியாளர்கள் உணவு வழங்கப்படும் தட்டுகளை அசுத்தமான தண்ணீரில் மொத்தமாக போட்டு கழுவும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பேருக்கு தான் பெரிய சைவ ஹோட்டல் ஆனால் இப்படியா கழுவுவீர்கள் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுவதோடு ஹோட்டல் உணவு பிரியர்கள் பலரையும் இந்த வீடியோ அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.