24 special

நேற்றுதான் திருமா "ஆவேசமாக பேசினார்" இன்று கனவில் மண்ணள்ளி போட்ட முதல்வர் ஸ்டாலின்!

thirumavalan and stalin
thirumavalan and stalin

இடதுசாரிகள் விசிக இணைந்து தமிழகத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர், திமுக அரசு சிறப்பான அரசு என்றும் இந்தியாவில் பாஜகவை எதிர்க்க கூடிய ஒரே வலுவான கூட்டணி தமிழகத்தில் அமைந்து இருப்பதாக திருமாவளவன் பாராட்டு தெரிவித்து இருந்தார். ஆனால் இன்றைய தினம் அவருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.


நகர்ப்புற வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை இணைந்து தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் இடதுசாரி கட்சிகள், விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை 11 மணியளவில் நடந்தது. இதில், மார்க்சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ‘வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை, கேஸ் உயர்வை குறைக்க வேண்டும்’ என மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர் கடுமையாக மத்திய அரசை விமர்சனம் செய்தவர், ஒரு பத்திரிகையாளர் என்னிடம் கேட்டார் மீண்டும் மக்கள் நல கூட்டணி உருவாகிறதா?

திமுக இல்லாமல் நீங்கள் ஏன் தனியாக குறுக்கு சால் ஓட்டு கிறீர்கள் என கேட்டார் அதற்கு நான் சொன்னேன் உண்மையில் இந்தியாவிலேயே பாஜகவை வலுவாக எதிர்க்க கூடிய கூட்டணி திமுக தலமையிலான கூட்டணிதான் என்று பதில் சொன்னேன் என தெரிவித்தார் திருமா அதாவது திமுக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என்பதை திருமாவளவன் குறிப்பிட்டு இருக்கிறார்.

நிலைமை இப்படி இருக்க அவருக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக விசிகவின் கொள்கை எதிரி என்று கூறப்படும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணிக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இன்று அன்புமணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள Anbumani Ramadoss அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

சமூகநீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார் ஸ்டாலின். பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என சத்தியம் செய்து இருக்கும் திருமா விரைவில் திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் அக்கூட்டணியில் இருந்து வெளியேறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவனின் கூட்டணி கனவில், அன்புமணிக்கு வாழ்த்து தெரிவித்தது மூலம் மண்ணள்ளி போட்டு இருக்கிறார் ஸ்டாலின் என்கின்றன அரசியல் திறன் ஆய்வாளர்கள்.