பிரதமர் மோடியின் தமிழக வருகையின் போது முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசு என பேசிய விதமும், மேடையில் திராவிட மாடல் என பேசியதும் பலத்த சர்ச்சையை உண்டாக்கியுள்ள சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில ஊடகம் ஒன்றிடம் ஏன் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் அடைந்தார் என்று குறிப்பிட்டு இருக்கிறார் அது பின்வருமாறு :-
இந்தியா டுடேவில் அண்ணாமலை கொடுத்த பேட்டியில், "அது பாத்தீங்கன்னா மேடம், பிரதமர் மோடிஜி, சென்னைக்கு வந்த போது மக்கள் அப்படியே மிகப்பெரும் ஆர்வத்தோடு, ஆராவாரத்தோடு இதுவரை தமிழகத்தில் எப்போதும் இல்லாத மாதிரி வரவேற்றாங்க...இதை பார்த்த உடனே முதல்வர் ஸ்டாலினால தாங்கவே முடியலை.
அதுவும் இதெல்லாம் நடந்தது இவங்க கோட்டைனு சொல்லி கொண்டு இருக்கும் கொண்டிருந்த சென்னையில் ...மக்கள் "மோடி மோடி"னு கோஷம் போட்டு வரவேற்க, ஸ்டாலின் உணர்ச்சி வேகத்தின் உச்சத்திற்கு போய்விட்டார். அந்த உணர்ச்சி வெடிப்புனாலதான் அதிகமாக ஆரம்பிச்சுட்டாரு..
இன்னைக்கு தமிழ்நாட்ட பொறுத்தவரை மொழி வியாபாரம் எல்லாம் எடுபடாது...திமுகவோட எழுபது வருட ஆட்டம் எல்லாம் முடிஞ்சுப் போச்சு". என அண்ணாமலை குறிப்பிட்டு பேசி இருக்கிறார். அண்ணாமலை கொடுத்த பேட்டியின் முழு லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது :-