வருகிற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி மக்களிடையே தங்களது திட்டங்கள் குறித்தும் சாதனைகள் குறித்தும் தெரிவிப்பதற்கு அனைத்தையும் தமிழில் மொழிபெயர்க்க தொடங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக ஒவ்வொரு திட்டத்தின் பெயரும் இந்தியில் இருக்கும்போது, அந்த திட்டத்தின் பெயர் தான் என்ன என்பதும், அந்த திட்டம் எதற்கானது என்பதும் ஓர் புரிதல் கூட இல்லாமல் இருந்தது மக்களிடையே. ஆனால் தற்போது ஒவ்வொரு திட்டத்திற்கும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு மிக எளிதாக மக்கள் புரிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி முடிவு எடுத்து இருக்கின்றது.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நடைபெறும் எந்த நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் சரி பாரத் மாதா கி ஜே என சொல்வார்கள். உடனிருக்கும் தொண்டர்களும் பாரத் மாதா கி ஜே என குறிப்பிடுவார்கள். இதனை தொலைக்காட்சிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் வீடியோவாக பார்க்கும்போதும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பொதுமக்களுக்கும் என்னடா இது இந்தியில் சொல்ல வேண்டியதாக இருக்கின்றது என பலரும் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். இவ்வாறு இந்தியில் தெரிவிக்கும்போது மக்களுக்கு ஏற்கனவே உள்ள இந்தித் திணிப்பு மட்டுமே நினைவு வருவதாக இருந்தது இதைத்தான் எதிர்க்கட்சிகளும் பெரும் குற்றமாகும் சொல்லிவருகின்றனர்.
இப்படி ஒரு நிலையில் இதற்கெல்லாம் மாற்றாக மக்கள் மத்தியில் தமிழ் உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், மத்திய அரசின் திட்டங்கள் எடுத்துரைப்பதற்காகவும், தமிழ் மக்களுக்காக பாஜக என்றும் நிற்கும் என்ற அடிப்படையில் இப்போதெல்லாம், "பாரத மாதா கி ஜெ" என்பதற்கு பதிலாக எந்த கூட்டத்திலும் பாரத அன்னை வாழ்க என்று கோஷம் இடுகின்றனர். இவ்வாறு தமிழில் உச்சரிக்கும்போது அனைவருக்கும் ஓர் உணர்வு ஏற்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக தற்போது தமிழில் திட்டங்களின் பெயர் வைப்பதால் மக்கள் மத்தியில் எளிதாக கொண்டு சேர்க்க முடியும் என பாஜக நம்புகிறது.
அந்த வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இருந்து ஒரு கிராமத்துக்கு செல்லும் சாலை ஒன்றில் "பிரதம மந்திரி சாலை திட்டம்" என பதாகை வைக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த கிராமத்திற்கு புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதேவேளையில் இந்த பதாகையை பார்க்கும் பொதுமக்கள் பிரதம மந்திரி திட்டத்தின் மூலமாக தான் நம்ம ஊருக்கு இந்த சாலை வந்து இருக்கா என ஊரில் உள்ள மக்கள் சாதாரணமாக தெரிந்து கொண்டு இதைப் பற்றி பேசத் தொடங்கி இருக்கின்றனர்.இது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என்று அரசியல் விமர்சனம் எழுந்துள்ளது. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு எடுத்து போதும் ஒவ்வொரு செயலும் சொல்லும் அனைவரின் மத்தியில் மிகவும் உற்று நோக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More Watch videos