தமிழக ஊடகங்கள் பல செய்யாத செயலை தனியார் ஊடகமான பாலிமர் செய்து இருப்பது பொது மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களை காட்டிலும் உள்ளாட்சி தேர்தலிகளில் அதிக அளவு பணம் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டு இருப்பதாக பல தரப்பிலும் புகார் எழுந்தது.
மேலும் மாவட்டத்திற்கு இத்தனை கோடி என ஆளும் கட்சி இதற்கு முன்னர் ஆண்ட கட்சிகள் என பங்கு போட்டு வேட்பாளர்களை நிறுத்தியதாகவும் தேர்தலுக்கு முன்னும் பின்னும் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன, வழக்கமாக இது போன்ற குற்றசாட்டுகளை விசாரணை செய்யும் தமிழக ஊடகங்கள் பல இந்த விவகாரத்தை கண்டு கொள்ளவே இல்லை.
இந்த சூழலில் தேனி நகராட்சி தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர் ஆகியோர் பணத்தை பங்கு பிரிப்பது, வேலைகளில் லஞ்சம் பெறுவது என பல்வேறு விவகாரங்களை செல்போனில் பேசும் ஆடியோ காட்சி வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது, இதன் மூலம் எந்த அளவு தேர்தல் நடைபெற்றுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இந்த சூழலில் ஆளும் கட்சி பிரமுகர்கள் பேசும் ஆடியோ உரையாடலை பாலிமர் தொலைக்காட்சி வெளிப்படையாக வெளியிட்டுள்ளது, பல்வேறு தமிழக ஊடகங்களுக்கு இந்த ஆடியோ கிடைத்த நிலையிலும் அவை இதனை வெளியிடாமல் மூடி மறைத்து இருப்பதாகவும் பாலிமர் மட்டுமே நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆடியோ குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யவேண்டும் எனவும், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு இருவரையும் இதில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கைது செய்யவேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ஊடக தர்மத்தை காப்பாற்றிய பாலிமர் செய்திக்கும் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.