பஜாக மகளிர் அணி சார்பில் இன்று காலை டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யபட்டது.பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33% இட ஒதுக்கீடு கொடுக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவந்த பிரதமருக்கு பாஜக மகளிர் அணி சார்பில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி பாஜக அலுவலகம் வந்தார் அப்போது பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பிரதமருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அப்போது மரியாதை நிமித்தமாகவும் பிரதமருக்கு மகளிர் என்ற முறையில் நன்றி தெரிவிக்கும் வகையில் வானதி பிரதமர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.வானதி காலில் விழுந்ததை தடுத்த பிரதமர் இனிமேல் இது போன்று எப்போதும் காலில் விழ கூடாது என வானதிக்கு தந்தை சாணத்தில் இருந்து அறிவுரை வழங்கினார். இதன் பிறகு மகளிர் சிலர் பிரதமருக்கு மாலை அணிவிக்கும் போது அவரது காலில் விழ பதிலுக்கு பிரதமர் எடுத்த முடிவு ஆச்சர்யத்தை கொடுத்தது.