நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்டிமுத்து ராசா பேசுகையில் பெரும் சர்ச்சை வெடித்தது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமையில் போட உட்காருடா என ஆளும் கட்சி எம்.பிகளை நோக்கி தமிழில் சபை மான்பை குறைக்கும் வகையில் வசை பாடினர்.இது பெரும் சர்ச்சையாக வெடித்து இருக்கிறது திமுக எம் பி கள் மீது உரிமை மீறல் புகார் அளிக்க ஆளும் தரப்பு தயாராகி வருகிறது, தயாநிதி மாறனின் பொறுப்பற்ற பேச்சை எதிர்கட்சியை சேர்ந்த உறுப்பினர்களே கண்டிக்க தொடங்கி இருக்கின்றனர்.இது பெரும் தலைவலியாக உருவாகியுள்ள நேரத்தில் திமுகவிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி கிடைத்து இருக்கிறது,
சென்னையில் சில நாட்களுக்கு முன்னதாக தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம், திராவிடர் கழகம் சார்பில் நடந்த, சனாதன ஒழிப்பு மாநாட்டில், அமைச்சர் உதயநிதி பேசும் போது, சிலவற்றை நாம் ஒழிக்க தான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை எதிர்க்க கூடாது; ஒழித்து கட்ட வேண்டும். அதுபோன்று தான் சனாதனம்; அதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே, நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் என்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்றார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து அறநிலையத்துறை அமைச்சரே பங்கேற்றதற்கும், சனாதன தர்மத்தை ஒழிப்பதாக உதயநிதி பேசியதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதியின் பேச்சின் பொருள் எத்தகையது? என விளக்கம் கேட்டு சனாதன ஒழிப்பு மாநாடு நடத்திய திராவிடர் கழகம், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இந்த நோட்டீஸ் மீது முறையான விளக்கம் கொடுக்கவில்லை என்றாலோ அல்லது தட்டி கழித்தாலோ, எப்படி ராகுல் காந்தி வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதே போன்று சட்ட சிக்கலை உதயநிதி மற்றும் சேகர் பாபு ஆகியோர் எதிர்கொள்ள நேரிடும் என்று கூறப்படுகிறது.ஒரு பக்கம் தயாநிதி மாறனின் வரம்பு மீறிய பேச்சால் உண்டான சிக்கல் மறு புறம் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்ச நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ் ஆகியவற்றால் திமுக தலைமை ஆட்டம் கண்டு இருக்கிறது. முன்பெல்லாம் இந்து மதம் குறித்து பேசிவிட்டு சட்டத்தின் பிடியில் சிக்காமல் திமுகவினர் மற்றும் சில அமைப்பை சேர்ந்தவர்கள் தப்பி வந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் மீதான நடவடிக்கை திமுகவிற்கு மட்டுமின்றி திராவிட கழகத்திற்கும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.