24 special

மகிழ்ச்சியில் மேயர் பிரியா....! வந்த செய்தி என்ன ....?

mayor priya
mayor priya

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அவர் தொடர்புடைய ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட மாமன்னன் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பெரும்பாலானோர் பார்த்தனர் அதிலும் குறிப்பாக முக்கிய பொறுப்பில் இருக்கும் ஏன் முதல்வரே சென்று பார்த்தது செய்திகளில் வெளியானது. அந்த வரிசையில் சென்னை சேர்ந்த மேயர் பிரியா மாமன்னன் படத்தை பார்த்துள்ளார். அதே காலகட்டத்தில் தான் தமிழகத்தில் காய்கறிகளின் விலை உச்சம் பெற்றிருந்தது அதிலும் குறிப்பாக தக்காளியின் விலை 100 ரூபாயும் கடந்து சென்று கொண்டிருந்தது.


எந்த அளவிற்கு என்றால் ஞாயிற்றுக்கிழமை பிரியாணி கூட செய்து விடலாம் ஆனால் தக்காளி சாதமோ காலை உணவிற்கு தக்காளி சட்னியோ செய்ய முடியாது அந்த அளவிற்கு சமூக வலைதளத்தில் மீம்ஸ்கள் பறந்தன! இந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மேயர் பிரியாவிடம் தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது இதற்காக தமிழக மக்களின் நலனுக்காக ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு மேயர் பிரியா தக்காளி வெங்காயம் பத்தி எல்லாம் என்கிட்ட கேக்காதீங்க அது என்னோட டிபார்ட்மென்ட் இல்ல கால்வாய் போடப்பட்டிருக்கா அல்லது மாநகராட்சி பற்றி கூட கேளுங்க என்று பதில் அளித்தார். அதே சமயத்தில் சமீபத்தில் வெளியான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த படமான மாமன்னன் படத்தை பார்த்தீர்களா அந்த படத்தை பற்றி தங்கள் கருத்து என்று கேட்டவுடன் பார்த்தேன் உதய் அண்ணா அருமையாக நடத்தி இருந்தார் அவரது நடிப்பு மிகவும் பாராட்டுக்குரியது என்று மாமன்னன் படத்தைப் பற்றி புகழ்ந்து பாராட்டினார். 

மேயர் பிரியா இப்படி இரண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தது அறிவாலயத்தில் இரண்டு வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் கடும் கோபம் கொண்ட திராவிட மாடல் அரசு மேயர் பிரியா இனி பொதுவெளிகளில் அதிகமாக பேசக்கூடாது என்ற வாய்மொழி உத்தரவை மறைமுகமாக கொடுத்ததாக தகவல்கள் வெளியானது. அதன் அடிப்படையிலேயே இவ்வளவு காலமாக பிரியா பொதுவெளியில் பேசும் நிகழ்ச்சிகளோ பத்திரிகையாளர்கள் சந்திப்போ நடத்தப்படாமல் மெல்ல புறக்கணிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இனிவரும் காலமானது மழைக்காலமாகவும் அதுவும் குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக மழை பொழிந்து நீர் தேங்கி இருக்கும் சூழ்நிலையும், போக்குவரத்து நெரிசல், மின்வெட்டு போன்ற பல அசௌகரியமான நிகழ்வுகள் நடக்கின்ற காலமாகும். இதனால் மேயர் பிரியாவிற்கு மழை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நலனை கடத்தல் கொண்டு ரூபாய் 4.37 கோடி மதிப்பீட்டில் 15 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை கொண்ட வாகனங்களை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார். 

சென்னை ரிப்பன் கட்டடவளாகத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் சில அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த திட்டத்திற்காக மேயர் பிரியாவிற்கு அறிவாலயத்திலிருந்து குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடமிருந்து பாராட்டுக்கள் சென்றுள்ளதாம், அறிவாலயமே பிரியாவை அழைத்து இந்த திட்டம் நன்றாக செயல்பாட்டிற்கு வந்தால் மகளிர் மத்தியில் ஆட்சியின் மதிப்பு உயரும் அதனால் முறையாக செயல்படுத்தி பயன்படுத்தவும் என அறிவுரை வேறு வழங்கப்பட்டுள்ளதாம் நீண்ட நாட்களுக்கு பிறகு மேயர் பிரியாவிற்கு பாராட்டு கிடைத்ததால் சந்தோஷத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.