24 special

பாகிஸ்தான் சவூதி கூட்டணி சொல்லி ஒருநாள் ஆகல! பாகிஸ்தானை மீண்டும் வெளுக்க ரெடியான இந்தியா

RAJNATHSINGH,SHAHBAZSHARIF
RAJNATHSINGH,SHAHBAZSHARIF

பாகிஸ்தான் சவூதி கூட்டணி சொல்லி ஒருநாள் ஆகல! பாகிஸ்தானை மீண்டும் வெளுக்க ரெடியான இந்தியா!


நமது பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் தற்போது மொராக்கோவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவுக்கு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும்.இதை உலக நாடுகள் ஊற்றுபோக்கி பார்த்து வருகிறார்கள். மேலும் மொராக்கோ பாதுகாப்புத்துறை மந்திரி அப்தல்டிப் லவ்டியி மற்றும் ராஜ்நாத் சிங் இடையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது இந்தியா, மொராக்கோ இடையே பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான விரிவான செயல்திட்டம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும்   டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ்' நிறுவனத்தின் கவச வாகன உற்பத்தி ஆலையை துவக்கி வைக்கிறார். ராஜ்நாத் சிங் உலக அளவில் இந்தியாவை விட்டு வெளிநாட்டில் தொடங்கப்பட்ட  முதல் இந்திய ராணுவ உற்பத்தி ஆலை இதுவாகும். நாட்டின் ராணுவத் துறையில் வளர்ந்து வரும் உலகளாவிய விரிவாக்கத்தை பிரதிபலிக்கும் முக்கிய மைல்கல்லாக இது அமைந்துள்ளது-.

இந்த சூழலில் சவுதியிடம் பாகிஸ்தான் பாதுகாப்பு குறித்து  ஒப்பந்தம் போட்டது உடனே பாக் ஆதரவு ஊடகங்கள் இந்தியா பாகிஸ்தானை தாக்கினக் வளைகுடா நாடுகள் ஒன்றாக இணையும் இந்தியாவிற்கு பெரும் தலைவலி என செய்திகளை பறக்கவிட்டது. 

இதையெல்லாம் உடைத்து நொறுக்கியுள்ளார் நம் பாதுகாப்பு அமைச்சர்.  இந்தியா உலக நாடுகளிடம் பொருளாதார ஒப்பந்தகளை பேசி வருகிறார்கள். பாகிஸ்தானை தாக்கினால் சவூதி வரும் என தெரிவித்த நிலையில் ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை மீண்டும் தொடங்கும் என பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியிருப்பது பாகிஸ்தான் மட்டுமல்ல ஓட்டுமொத்த வளைகுடா  நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்தியா. 

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இந்தியர்களிடம் உரையாடிய ராஜ்நாத் சிங், “ஆபரேஷன் சிந்தூரின் பகுதி 2 அல்லது பகுதி 3 நடவடிக்கைகள் தேவையா என்பது குறித்து நாங்கள் சொல்ல முடியாது. அது பாகிஸ்தானின் நடத்தையைப் பொறுத்தது. அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைக்கும்.

ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு அடுத்த நாள் முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்புச் செயலாளருடன் ஆலோசனை நடத்தினோம். அப்போது, அரசாங்கம் ஒப்புதல் அளித்தால் அவர்கள் நடவடிக்கைக்குத் தயாரா என்பதுதான் எனது முதல் கேள்வி. அவர்கள் ஒரு நொடி கூட தாமதிக்காமல், முற்றிலும் தயாராக இருப்பதாக பதிலளித்தனர். பின்னர் நாங்கள் பிரதமர் மோடியை அணுகினோம், அவர் எங்களுக்கு ஆதரவு அளித்தார், எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள்.

பிரதமரும்கூட ஆபரேஷன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவே கூறியுள்ளார். எனவே தேவையெனில் அதை மீண்டும் தொடங்கலாம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியப் படைகள் எல்லையைத் தாண்டி பல பயங்கரவாத முகாம்களை அழித்த பிறகு, பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியபோது, ​​“நாங்கள் நல்ல உறவுகளை விரும்புகிறோம், ஏனெனில் மறைந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 'நண்பர்களை மாற்ற முடியும், ஆனால் அண்டை நாடுகளை மாற்ற முடியாது' என்று கூறினார். அதன் அடிப்படையில் போர் நிறுத்ததுக்கு ஒப்புக்கொண்டோம். நாங்கள் அவர்களை சரியான பாதைக்குக் கொண்டுவர முயற்சிக்கிறோம்” என்று அவர் கூறினார்.

மேலும், “பஹல்காம் தாக்குதலின்போது பயங்கரவாதிகள் எங்கள் மக்களின் மதத்தைக் கேட்ட பிறகு கொன்றனர். ஆனால், நாங்கள் மதத்தின் அடிப்படையில் யாரையும் கொல்லவில்லை, ஆயுதப்படைகள் நமது மக்களைக் கொன்றவர்களை மட்டுமே கொன்றன. இந்தியாவில் மக்கள் எந்த மதத்தை நம்பினாலும் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதில்லை. இதுதான் இந்தியாவின் குணம்” என்றார் விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிச்சயம் ஒருநாள் இந்தியாவுடன் இணையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.