24 special

நவராத்திரியில் தொடங்கியது ! மொரோக்கோவில் இந்தியாவின் முதல் ராணுவ உற்பத்தி மையம்... உலக வரைபடத்தில் புதிய அத்தியாயம்

PMMODI,RAJNATHSINGH
PMMODI,RAJNATHSINGH

வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவிற்கு நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அரசு முறை பயணமாகசென்றுள்ளார். நம் பாதுகாப்பு துறை  அமைச்சர் ஒருவர் மொராக்கோவிற்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.  இதனால் உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்கி வருகிறது. ஏனென்றால் தற்போது உள்ள உலக சூழலில் எப்போது  எது நடக்கும் என்பது தெரியாது. இந்தநிலையில் தான்இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மொராக்கோவிற்கு செல்வது முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும் இந்த பயணம்  இரு நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் உறவை மேலும் வலுப் படுத்துவதே முக்கிய நோக்கம் என ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.


பயணத்தின் போது, அந்நாட்டின் பெர்ரெச்சிட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ்' நிறுவனத்தின் கவச வாகன உற்பத்தி ஆலையை துவங்கி வைக்கிறார்..ஆப்ரிக்காவில் துவங்கப்பட்டுள்ள முதல் இந்திய ராணுவ உற்பத்தி ஆலை இதுவாகும். நாட்டின் ராணுவத் துறையில் வளர்ந்து வரும் உலகளாவிய விரிவாக்கத்தை பிரதிபலிக்கும் முக்கிய மைல்கல்லாக இது அமைந்துள்ளது-.மேலும், மொராக்கோவின் ராணுவ அமைச்சர் அப்தெல்டிப் லவுதியி உடன் இருதரப்பு பேச்சு நடத்துகிறார்.இதில் இரு நாட்டுக்கிடையேயான ராணுவ ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொரோக்கோ என்பது ஆப்ரிக்காவின் மேற்குப் பகுதியின் முக்கிய நாடு. அதன் புவியியல் முக்கியத்துவம் மிக அதிகம் – மொரோக்கோவிலிருந்து சில கிலோமீட்டர் கடலைக் கடக்கினால் ஸ்பெயின் வந்து விடும். அதாவது இது யூரோப்பின் நுழைவாயில் போன்ற நாடு. இந்தியா இங்கு தன் உற்பத்தி நிலையத்தை நிறுவியிருப்பது, ஆப்ரிக்காவின் ஆயுத சந்தையை மட்டுமல்ல, யூரோப்பின் பாதுகாப்பு சந்தையையும் அடையக்கூடிய வாய்ப்பாகும்.

இந்த பயணத்தில் இந்தியா பல முக்கிய பாதுகாப்பு, தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒப்பந்தங்களையும் செய்து முடித்திருக்கிறது. இது எதிர்காலத்தில் இந்தியாவுக்கு பெரும் வருமானத்தையும், வேலை வாய்ப்புகளையும், தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் தரும். “மேக் இன் இந்தியா” திட்டம் இப்போது “மெக் ஃபார் தி வேர்ல்ட்” ஆக மாறுகிறது என்பது இதன் மூலம் நிரூபிக்கப்படுகிறது.

பிரதமர் மோடி மேற்கொள்ளும் உலகப் பயணங்களை சிலர் விமர்சித்தாலும், அதன் விளைவு இன்று கண்கூடாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு பயணமும் ஒரு பொருளாதார  விதையை போட்டுத்தான் வருகிறார் . அந்த விதைகள் தற்போது  வேரூன்றி மரமாகிறது. இந்தியா உலக ராணுவ உற்பத்தி வரைபடத்தில் முக்கியமான இடம் பெறுகிறது.

இதற்கெல்லாம் ஒரு பெரிய நோக்கம் உள்ளது – “விசன் 2047.” அதாவது இந்தியா தனது 100-வது சுதந்திர ஆண்டு விழாவை உலகின் முன்னணி வல்லரசாகக் கொண்டாட வேண்டும் என்பதே அந்த இலக்கு. ராணுவ வலிமை, பொருளாதார வளர்ச்சி, உலக அரசியலில் முன்னணி பங்கு – இந்த மூன்றும் ஒரே பாதையில் செல்கின்றன.

இந்த நிகழ்வு ஒரு பொருளாதார வெற்றி மட்டுமல்ல, ஒரு அரசியல் செய்தியும் கூட. உலகத்திற்கு இந்தியா சொல்லும் செய்தி – “நாம் உலகின் உற்பத்தி மையம். நாம் உலகத்தின் பாதுகாப்பிற்கும் பங்களிக்கிறோம்.”

இது நவராத்திரி தொடங்கும் நேரத்தில் நடப்பது மேலும் முக்கியம்.  இந்தியா வலிமையுடன் எழுந்து உலகத்தில் முன்னணியில் நிற்கும் நாள் இது. மக்களும் இந்த வரலாற்று தருணத்தில் தேசத்துக்காக பிரார்த்திக்க வேண்டும்.