
தீவிரவாதிகளை ஆதரித்தால் பாகிஸ்தான் சல்லி சல்லியாக நொறுங்கும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்த நிலையில் பலுசிஸ்தானை தனி நாடாக அறிவித்துள்ளது பலூச் விடுதலை படை. மேலும் பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற கெடு விதித்துள்ளனர்.இந்தியா பஹல்கம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது தாக்குதலில் பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகள் சின்னாபின்னமாயின.
அதே நேரத்தில் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 51 இடங்களில் தாக்குதல்களை நடத்தியுள்ளது பலூச் விடுதலை படையினர். இது பாகிஸ்தான் ராணுவம், உளவு மையங்கள் மட்டுமின்றி உள்ளூர் காவல் நிலையம், கனிம போக்குவரத்து வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்புகளை உள்ளிட்டவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது .
பலுசிஸ்தானில் ‘பலூச் விடுதலை படையினர், தனி நாடு கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்பி வரும் பலூச் விடுதலை படையினர், பாகிஸ்தானின் பல நிலைகள் மீது தொடர் தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். மேலும், தங்களை அங்கீகரிக்கும் படியும் இந்தியா மற்றும் ஐ.நா-வுக்கு பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது பலுச்சிஸ்தானை தனி நாடாக பலூச் விடுதலை படையினர் அறிவித்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து பிரிந்து பலுசிஸ்தான் சுதந்திரம் பெற்றதாக தெரிவித்துள்ள அவர்கள், பாகிஸ்தான் கொடியை அகற்றிவிட்டு பலுசிஸ்தான் கொடியை பறக்கவிட்டு தனி நாடு அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்.
பலுசிஸ்தான் வான்பகுதி, கடல் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக காலி செய்ய வேண்டும் எனவும், போலீஸ் மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள பலுச் அல்லாதவர்கள் உடனடியாக பலுசிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.மேலும், பலுசிஸ்தானின் சுதந்திரத்தை ஐ.நா மற்றும் உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டுகோள் விடுத்துள்ள கிளர்ச்சியாளர்கள், நாட்டின் கரன்சி நோட்டுகள் மற்றும் பாஸ்போர்ட்களை அச்சடிக்க நிதியை விடுவிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், பலுசிஸ்தானில் விரைவில் இடைக்கால அரசு அமைக்கப்படும் எனவும், அமைச்சரவையில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ‘குடியரசு பலுசிஸ்தான்’ என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகி வந்தது பாகிஸ்தானுடனான சண்டையில் பலூச் விடுதலை படையினர் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சர்வதேச பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்கும் பாகிஸ்தான் இருப்பு முழு உலக அழிவுக்கும் விரைவில் வழிவகுக்கும். ஏனெனில், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுக்களின் எழுச்சிக்கு மையமாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. எனவே சர்வதேச சமூகம் பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும்.என்ற கோரிக்கையையும் வைத்துள்ளது. மேலும் பிஎல்ஏ செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலூச் கூறியதாவது: பாகிஸ்தானின் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் தொடர்ந்து சகிப்புத்தன்மை காட்டுவது தெற்காசிய பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மையை உருவாக்கும். என கூறியுள்ளார்
மேலும் பலுசிஸ்தான் இனிமேல் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை என அறிவித்துள்ள பலுசிஸ்தான்கிளர்ச்சி படையினர், தங்களுக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய தேசபக்தி கொண்ட மீடியாக்கள், யூடியூபர்கள், இந்தியாவை பாதுகாக்க போராடுபவர்கள் பலுசிஸ்தானை சேர்ந்தவர்களை பாகிஸ்தான் மக்கள் என குறிப்பிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல. பலுசிஸ்தானியர்கள்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன். டாகாவில் 93 ஆயிரம் ராணுவ வீரர்கள் சரணடைந்து பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட அவமானம் மீண்டும் ஏற்படாமல் இருக்க, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்த வேண்டும் என பலூச் படை தலைவர் கூறியுள்ளார்.