24 special

"நாடு என்ன எதிர்பார்த்ததோ அது நடந்தது. கதி கலங்கி மண்டியிட்ட பாகிஸ்தான்.. திடீரென நடந்த மாற்றம் ...பாகிஸ்தான் நிலை over!"


பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா அதிரடியாக நிறுத்தி வைத்தது. பாகிஸ்தானின் விவசாயத்துக்கு 80 சதவீதம் சிந்து நதியையே நம்பி இருப்பதால் பாகிஸ்தான் கதற ஆரம்பித்தது. இந்த நிலையில் இந்தியாவிடம் கெஞ்ச ஆரம்பித்துள்ளது பாகிஸ்தான். சிந்து நநி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவை கைவிட வலியுறுத்தி பாகிஸ்தான் நீர்வளத்துறை அமைச்சகம் இந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.



பாகிஸ்தானின் பெரும்பாலான குடிநீர் தேவையும் சிந்து நதி நீரை நம்பியிருந்ததால், பாகிஸ்தான் புலம்பி தீர்த்தது. உலக வங்கியை நாட இருப்பதாகவும் பாகிஸ்தான் கூறியது. இதற்கிடையே, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் தவிடுபொடியாகின.

இதனை தொடர்ந்து இந்தியா மீது டிரோன் தாக்குதலை நடத்த முயற்சித்தது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலை இந்தியா தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் முறியடித்தது. இந்தியா நடத்திய பதிலடியில் பாகிஸ்தான் அச்சம் அடைந்து பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது. இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் சிந்து நதி நீர் நதி ஒப்பந்தம் உள்பட பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்று இந்தியா கூறியது.

இதனால் கலங்கி போயிருக்கும் பாகிஸ்தான், தற்போது இறங்கி வந்துள்ளது. பாகிஸ்தான் நீர்வளத்துறை அமைச்சகம், இது தொடர்பாக இந்தியாவுக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யும் முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் ராணுவ பலமும் ராஜதந்திர நடவடிக்கைகளும் கண்டு  பாகிஸ்தானை மட்டுமல்ல உலக வல்லரசு நாடுகளே கத்திலங்கை நிற்கிறார்கள். இந்தியாவின் தயாரிப்புகளுக்கு முக்கியத்தும் அளித்துவருகிறார்கள். ஆகாஷ் மற்றும் பிரோமோஸ் ஏவுகணைளுக்கு மதிப்பு உயர்ந்துள்ளது  

பாகிஸ்தானுக்குள் நுழைந்த நம் ஏவுகணைகள் துல்லிய தாக்குதலை மேற்கொண்டு பயங்கரவாத முகாம்களை தகர்த்தெறிந்து,. எல்லாம், 25 நிமிடங்களுக்குள் முடிந்துள்ளன.இச்செய்தி கேட்டதிலிருந்தே உலக முழுக்க உள்ள இந்தியர்கள் முகத்தில்  ஒரே உற்சாக அலை வீசியது இந்தியர் மீது கைவைத்தால் என்ன நடக்கும் என்பதை பிரதமரும், ராணுவமும் உலகத்திற்கே  பறைசாற்றி விட்டனர்.கடந்த 2004 -14ல் காங்கிரஸ் ஆட்சியில், மன்மோகன் சிங், சோனியா தலைமையின் கீழ் நாடு இருந்தபோது, பயங்கரவாதிகளால் பலமுறை நம் நாடு தாக்கப்பட்டது.

கடந்த 2008ல் மும்பை தாஜ் ஹோட்டலில், தொடர்ந்து மூன்று நாட்கள் பயங்கரவாதிகள் தாக்கியதில், பாதுகாப்பு படையினர் உட்பட, 174 பேர் கொல்லப்பட்டனர்; 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்போதைய காங்., அரசு இதற்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றமுடியவில்லை. உலக நாடுகள் முன் பாகிஸ்தானை தனிமைப்படுத்த நினைத்த முயற்சிகளும் பெரிதாக வெற்றி பெறவில்லை.

ஆனால், 2014ல் பா.ஜ.க  ஆட்சிக்கு வந்தபின், நிலைமை மாறியது. பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டதோடு, ஒரு சில தாக்குதல்களுக்கும் தகுந்த பதிலடிகள் தக்க சமயத்தில் கொடுக்கப்பட்டன.தற்போது, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து, நம் ராணுவம் தாக்கியுள்ளது என்றால், அதற்கு காரணம் தேசப்பற்றுள்ள வலிமையான தலைமை தான் இதே ராணுவம்தான்,  நம் ராணுவத்தின் பலத்தை நமக்கு மட்டுமல்ல; உலகுக்கே எடுத்துக்காட்டி விட்டார் மோடி! ஒரு நாடு வலிமையான தலைமையின் கீழ் இருந்தால் தான், அந்நாட்டு மக்கள் பயமின்றி வாழ முடியும். இதை கட்சி சார்பற்று மக்கள் என்று உணர துவங்குகின்றனரோ, அன்றே நம் நாடும் வல்லரசு நாடாகும்!