24 special

இந்தியாவில் உள்ள கோவிலை விற்ற பாகிஸ்தானியர்..!

india temples
india temples

உத்திரபிரதேசம் : உத்திரபிரதேசம் காணிபூரில் உள்ள ஒரு கோவிலை பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் உணவகம் அமைக்க விற்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாநிலம் முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


ராம்ஜான்கி கோவில் மற்றும் வேறு சில சொத்துக்களை அந்த பாகிஸ்தானியர் விற்பனை செய்ததை தற்போது கான்பூர் நிர்வாகம் கண்டறிந்துள்ளது. அந்த சொத்துக்களை எதிர்ச்சொத்தாக மாற்றும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. கான்பூர் மாவட்டம் பெகோன்கஞ்சில் ராம் ஜான்கி கோவில் அமைந்துள்ளது. கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் பாகிஸ்தான் நாட்டவரான அபித் ரகுமான்  என்பவருக்கு சொந்தமானது என கூறிவருகிறார்.

1982களில் இந்த அபித் ரகுமான் கோவில்வளாகத்தில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடைவைத்திருந்த முக்தர் பாபா என்பவருக்கு விற்றதாக சொல்லப்படுகிறது. அபித் ரகுமான் 1962ல் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கோவில் வளாகத்தில் வசித்த குடும்பங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி ஹோட்டல் ஒன்றை அமைத்துள்ளார்.

ஆனால் தற்போதுவரை கான்பூர் முனிசிபல் கார்ப்பரேஷன் பதிவு ஆவணங்களின்படி சொத்து இன்னும் கோவிலாகவே பட்டியலிடப்பட்டிருப்பது திகைப்புக்குரியதாக உள்ளது. சத்ரு சம்பாதி சன்ரஷன்சமிதி தரப்பில் கடந்த 2021ல் இதுகுறித்த புகாரை முனிசிபல் ஆணையரிடம் அளித்த பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

அப்போதைய மாவட்ட மாஜிஸ்திரேட் இந்த விவகாரத்தை விசாரணை செய்யுமாறு துணை மாஜிஸ்திரேட்டிடம் அறிவுறுத்தினார். அதன்பின்னர் அந்த கோவிலையும் அதன் சொத்துக்களையும் எதிரி சொத்தாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் முக்தாரின் மகனான மெஹ்மூத் உமர் தன்னிடம் அனைத்து ஆவணங்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.