24 special

சீமானின் நண்பரான பயங்கரவாதி யாசின் மாலிக் ஒப்புதல் வாக்குமூலம்..!


ஜம்முகாஷ்மீர் : கடந்த 2017ல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகள் மேற்கொண்ட வழக்கில் தன்மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அவருக்கு ஆயுள்தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த குற்றத்தை பயங்கரவாதி யாசின் மாலிக் ஒப்புக்கொண்டார். அதையடுத்து டெல்லியில் உள்ள NIA சிறப்பு நீதிமன்றம் நேற்று அவர்  தீர்ப்பளித்தது. யாசினுக்கு ஆயுள்தண்டனை கொடுக்கப்படலாம் என தெரிகிறது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி பிரவீன் சிங் "யாசின் மாலிக் பயங்கரவாத நிதியை நேரடியாக பெற்றவர் என்பது முதன்மையானதாகும்.

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் அதிகபட்ச தண்டனை அளவுகளை குறித்த விவாதம் மே 25 அன்று நடைபெறும்" என தீர்ப்பளித்துள்ளார். 2017ம் ஆண்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற பயங்கரவாத சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதுடன் அதற்கான நிதியையும் பிரிவினைவாத தலைவர்களுள் ஒருவரான யாசின் மாலிக் பெற்றுள்ளார். 


இதை கடந்த வாரம் ஒப்பொக்கொண்டுவிட்டதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புசட்டமான UAPA வின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது. யாசின் மீது சட்டப்பிரிவு 16, பயங்கரவாத செயலுக்கு நிதிதிரட்டுதல் 17, பயங்கரவாத செயலுக்கு சதிசெய்தல் 18, மற்றும்ஜ சட்டப்பிரிவு 20 உட்பட 120பி 124-ஏ உட்பட பலவழக்குகளில் தண்டனை வழங்கப்படலாம் என தெரிகிறது.

இந்த யாசின் மாலிக்குடன் கேரளாவை சேர்ந்தவராக கருதப்படும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செபாஸ்டியன் சைமன் ஒரே மேடையில் கைகோர்த்து அலவலாவியது குறிப்பிடத்தக்கது. மேலும் இடதுசாரிகளான அருந்ததிராய் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடனும் சில நிகழ்ச்சிகளில் யாசின் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.