24 special

"உளவுத்துறை " கொடுத்த தகவல் தூது போன பழனிசாமி ஆதரவாளருக்கு பாஜக கொடுத்த டோஸ்..!

Eps
Eps

பாஜக முக்கிய பிரமுகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவலர்களான முன்னாள் அமைச்சர்கள் இருவர் டெல்லி சென்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது, அதிமுகவில் பிளவு என்பதே இல்லை நாங்கள்தான் உண்மையான அதிமுக எங்களை தேர்தல் கமிஷன் அங்கீகாரம் செய்யவேண்டும் எனவும் அதற்கு பரிசாக நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு செல்வாக்கு இருக்கும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யவும் கூட்டணி பேச்சு வார்த்தை ஈடுபடவும் எடப்பாடி பழனிசாமி விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.


ஆனால் இதற்கு  பாஜக பிடிக்கொடுக்க வில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி குறித்து உளவுத்துறை எடுத்த சர்வே முடிவுகள்தான் அதற்கு காரணம் என கூறப்படுகிறது, அதிமுக ஒற்றை தலைமை விவாகரத்தில் மாறி மாறி ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் சட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர், இரண்டு தரப்பிற்கும் சென்னை உயர்நிதிமன்றத்தில் மாறி மாறி சாதகமான தீர்ப்புகள் வந்த நிலையில் இறுதியாக எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு செல்லும் எனவும், ஒருங்கிணைப்பாளர் பதவி காலியானதா என்ற நிலைக்குள் நாங்கள் செல்லவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து தற்போது உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு சென்றுள்ளது, இந்த சூழலில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் ஆதரவை பெற இரண்டு தரப்பும் முயன்று வருகின்றனர், தொடக்கத்தில் முரண்டு பிடித்த ஈபிஎஸ் தரப்பு தற்போது தற்போது பாஜக தயவை எதிர்நோக்கி டெல்லி கதவை தட்டியுள்ளது.

ஆனால் தமிழக நிலவரம் குறித்து நாளுக்கு நாள் உளவு அமைப்புகள் தகவல்கள் திரட்டி டெல்லிக்கு அனுப்பி வருகின்றனர் குறிப்பாக தமிழக கள நிலவரம் குறித்து கண்காணிக்க மூவர் தலைமையில் பாஜக குழு அமைத்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதில் உளவு துறை கொடுத்த தகவல் பாஜகவை எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது நம்பிக்கை வைக்க மறுக்கிறதாம் அதாவது  அதிமுகவில் ஒற்றை தலைமை கோசத்தை வழியிறுத்திய அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்களான, முனுசாமி, சண்முகம், உதயகுமார், தளவாய் சுந்தரம், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி போன்றவர்கள் அதிமுக இடத்தை பாஜக பிடிக்க பார்க்கிறது, இதே நிலையில் சென்றால் பாஜகவினர் கொங்கு மற்றும் வடக்கு மண்டலம், தென் தமிழகம் உள்ளிட்ட இடங்களில் வலுவாக வந்து விடுவார்கள்.

இதற்கு உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியே சான்று என தெரிவித்து இருக்கிறார்கள் இனியும் இரட்டை தலைமை நீடித்தால் தொண்டர்கள் அணி மாறி விடுவார்கள் என்பதால் ஒற்றை தலைமை கோரிக்கையை அதிமுக எடப்பாடி அணி முன்னெடுத்தது..,

உண்மையில் ஆளும் கட்சியான திமுகவை எதிர்க்க ஒற்றை தலைமை கோசத்தை முன்னெடுக்கவில்லை அதிமுகவை சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்கள் ஆளும் கட்சியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர், எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுகவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது என்பது 100% உண்மை.

ஆனால் அவை அனைத்தும் பணத்தால் நடைபெற்று வருகிறது, தன்னை உருவாக்கிய சசிகலாவை தூக்கி ஓரம்கட்டிய எடப்பாடி பழனிசாமி நாளை பாஜகவிற்கு அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவு MP களின் ஆதரவு தேவை என்றால் நிச்சயம் உலை வைப்பார் என ஆதாரத்துடன் குறிப்பிட்டு இருக்கிறதாம்.

இதனால் தான் எடப்பாடி ஆதரவலர்களான இரண்டு முன்னாள் கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்கள் பாஜக முக்கிய பிரமுகர்களிடம் எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும் என்று தெரிவித்த பின்பும் பாஜக எந்தவித பதிலையும் கூற விரும்பவில்லையாம்.

திமுகவை எதிர்க்க பல்வேறு வாய்ப்புகள் தற்போதைய பிரதானா எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு கிடைத்துள்ளது, சேலம் எட்டு வழி சாலை திட்டம் தேவை என பல்டி அடித்த விவாகரத்தில் எடப்பாடி பழனிசாமி வாயே திறக்கவில்லை, இன்னும் சொல்ல போனால் கொட நாடு கொள்ளை வழக்கு திமுக அரசால் விரைவில் நடத்தி முடிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது பலத்த சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

மேலும் நெடுஞ்சாலை துறை டெண்டர் விவாகரத்தில் ஊழல் நடந்ததாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை வேண்டும் என உச்ச நீதிமன்றம் சென்ற திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி தற்போது அந்த நிலைப்பாட்டில் இருந்து பல்டி அடித்து இருப்பன போன்ற பல தகவல்களை மத்திய உளவு அமைப்புகள் திரட்டி டெல்லியில் கொடுத்து இருக்கிறதாம்.

எனவே எடப்பாடி பழனிசாமி தரப்பை நம்பும் விஷயத்தில் பாஜக 100% தெளிவாக இருப்பதாக கூறப்படுகிறது, மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றொரு சசிகலாவாக பாஜகவையும் அணுகினால் அதற்கு தகுந்து பதிலடி விரைவில் இருக்கும் என்று கூறுகின்றன டெல்லி வட்டாரங்கள்.