தமிழகத்தில் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி இதுவரை தமிழக திரைத்துறை காணாத ஒன்றாக அமைந்தது, எப்போதும் மிக பெரிய அளவில் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்றைய தினம் அடக்கி வாசிக்கப்பட்ட பின்னணி வெளியாகி இருக்கிறது.
2009-2014 சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படங்களுக்கு தமிழக அரசு விருது வழங்குவதாக அறிவித்தது ஆச்சர்யத்தை கொடுத்தது மேலும் சினிமா துறையில் உள்ள ஒருசிலரை தவிர அத்தனை நடிகர்கள் நடிகைகள் பெயரும் விருது வழங்கும் பட்டியலில் இடம்பெற்று இருந்தது பெரிய கிண்டலை உண்டாக்கியது,
குறிப்பாக முதலில் அரசு சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருந்தார்களாம், இதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட நிகழ்ச்சி நடத்துவது என்றும் முன்னணி தமிழ் திரை உலகினர் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு திரை உலகினரை அழைத்து விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்த திட்டம் தீட்ட பட்டதாம்.
இந்த சூழலில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழில் தயாரிக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக செய்தி வெளியானது, இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.
மக்கள் பிரச்னையை கவனிக்க நேரமில்லை முதல்வருக்கு ஆனால் திரைப்படத்தை ப்ரோமோட் செய்ய நேரம் இருக்கிறது என விமர்சனம் செய்த நிலையில், அது சாமானிய மக்கள் மனதிலும் கேள்வி எழுப்பும் விதமாக அமைந்தது, இது ஒருபுறம் என்றால் நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி விழா நிகழ்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்காதது பெரும் சர்ச்சையை உண்டு செய்தது.
மேடை தோறும் அண்ணாமலை கேள்வி எழுப்பி வருகிறார், திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லவில்லை என்றால் அது அவரது கொள்கை ஆனால் முதல்வராக பொறுப்பேற்ற பின்பு இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் கடந்து செல்வது தவறு என அண்ணாமலை விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த சூழலில் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தினால் அது கடும் சர்ச்சையில் சிக்கும், போதாத குறைக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு இப்போது விருது வழங்க என்ன அவசரம் வந்தது என்ற கேள்வியயை பாஜகவினர் எழுப்புவார்கள் என்பதால் அவசர கோலத்தில் விழாவை நடத்தி முடித்து இருக்கிறார்களாம்.
இந்த அவசர அழைப்பு காரணமாக பல நடிகர்கள் நிகழ்ச்சியை புறக்கணித்து இருப்பதாக கூறப்படுகிறது, குறிப்பாக, இந்த விருதுகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் வழங்கினாா்கள்.
முன்னணி நடிகா்கள் பலா் உள்பட 314 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், பலா் விருதுகளைப் பெற வரவில்லை. குறிப்பாக, நடிகைகள் அமலா பால், இனியா, அனுஷ்கா, நயன்தாரா, சமந்தா, நடிகா்கள் விமல், சிவகாா்த்திகேயன், ஜீவா, விஜய்சேதுபதி, சூரி, ஆா்யா, நஸ்ரியா நசீம், இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரகுமான் ஆகியோர் விருது அறிவித்தும் வாங்க வரவில்லை.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் ஏன் இப்படி அவசர கோலத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என புலம்பி தீர்த்து இருக்கிறார்களாம், எப்போதும் திரை துறைக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கும் திமுக அரசு அண்ணாமலை கொடுத்த அழுத்தம் காரணமாக பெரிய அளவில் விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தவில்லை என்கிறார்கள் திரை துறையை சேர்ந்த பலர்.
மொத்தத்தில் திரை துறை மோகம் இல்லாத முழுமையான செயல்பாடு கொண்ட எதிர்காலத்திற்கு தமிழகம் தயாராகி வருவது நேற்றைய நிகழ்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.