24 special

பாண்டேவின் அதிரடி கேள்வி.. அரங்கேறிய புது மாற்றம்..!

Pandey and narayanan
Pandey and narayanan

ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விகள் அமெரிக்கை நாராயணன் விவகாரத்தில் அதிரடி மாற்றங்களை உண்டாக்கியுள்ளது அது பின்வருமாறு :-


"நடந்து" முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதற்க்கு காரணமாக உட்கட்சிப்பூசல் எனும் காரணி மூலமாக இருந்தாலும்,

மூத்த நிர்வாகிகள் சிலர் காங்கிரசை கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது. மேலும் "வேட்பாளர்கள்", தேர்தல் பொறுப்பாளர்கள், தேர்வில் காங்கிரஸ் கோட்டைவிட்டதாக காங்கிரஸ் அபிமானிகள் முணுமுணுக்கின்றனர்.

இதனிடையே ரங்கராஜபாண்டேவுடன் நடந்த நேர்காணலில் அமெரிக்கை நாராயணன், ராகுல் மற்றும் ப்ரியங்கா காந்தியை வெளுத்து வாங்கிவிட்டார். இருவருக்கும் தலைமையேற்க தகுதியில்லை என உண்மையை உடைத்து பேசிவிட்டார்.

இதனால் வெகுண்டெழுந்த தமிழக காங்கிரஸ் தலைவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து உங்களை ஏன் நீக்ககூடாது என கேட்டு அமெரிக்கை நாராயணனுக்கு நோட்டீஸ் அனுப்பியும், அவரை தொலைக்காட்சிகளில் விவாதத்தில் பங்கேற்க கூடாது எனும் கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் “காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கும் தலைமைக்கும் விரோதமாக பொதுவெளியில் ஊடகங்கள் வாயிலாக கருத்துக்களை வெளியிட்டுவருவதால் அமெரிக்கை நாராயணன் காங்கிரஸ் கட்சி தொடர்பாக தொலைக்காட்சி விவாதங்களில்பங்கேற்கும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்க்கு இரு தினங்களுக்கு முன்னர் சவுக்கு சங்கர் என்பவருடன் (வைகோ வைவிட ராசிக்காரன் போல) அமெரிக்கை நாராயணன் செல்பி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கை 30 வருடமாக கட்சிக்கு சொந்தப்பணத்தில் உழைப்பில் புகழ் சேர்த்த நான் காங்கிரசுக்கு எதிராக பேசியது என்ன என்பதை அழகிரி விளக்க வேண்டும்” என கூறியுள்ளார். மேலும் சோனியா ராகுல் மற்றும் ப்ரியங்கா ஆகியோர் இன்று தங்களது ராஜினாமா கடிதத்தை இன்று நடக்கும் மூத்த நிர்வாகிகள் கூட்டத்தில் வழங்க இருப்பதாக "உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள்" தெரிவிக்கிறது.

source -madras telegram.