24 special

பிரதமர் மோடியை பாரிவேந்தர் பாராட்டிய பரபரப்பு பின்னணி..! கூட்டணி பஞ்சாயத்து..!

modi , stallin and parivendar
modi , stallin and parivendar

தமிழகத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தவர்கள் மத்தியில் தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்ற தலைவர்களே பிரதமர் மோடியை பல்வேறு தலைவர்களுடன் ஒப்பிட்டு பேசும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.


திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற ஐஜெகே கட்சி தலைவரும் புதிய தலைமுறை ஊடகத்தில் நிறுவனருமான பாரி வேந்தர் நேற்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசியவர் நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி இரவு பகலாக தூங்காமல் உழைத்து வருகிறார் என்றும், அவரை தமிழகம் நேசிக்கும் காலம் வரும் எனவும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், எம்பி-யுமான டி.ஆர்.பாரிவேந்தர் தெரிவித்தார்.

நாட்டின் மீது பற்று கொண்டவர்களாக காந்தி உள்ளிட்டோர் திகழ்ந்தனர். இப்போது பிரதமர் மோடி அவ்வாறு திகழ்கிறார். நாட்டின் வளர்ச்சிக்காக என்ன செய்ய வேண்டும் என்று இரவு பகலாக தூங்காமல் உழைத்து வருகிறார். இந்தியாவை தலைநிமிர்ந்து பார்க்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உழைத்துவரும் பெருமகன் அவர் சிறுபான்மையினருக்கு பிரதமர் மோடி எதிரி அல்ல.

தமிழகத்தை விட உத்தரபிரதேசத்தில்தான் அதிக எண்ணிக்கையில் சிறுபான்மையினர் எம்எல்ஏக்களாக உள்ளனர். ஆனால், தமிழகத்தில் இல்லாத ஒன்றை உருவகப்படுத்தி, பிரதமர் மோடியை சிறுபான்மையினருக்கு எதிரிபோல கட்டமைத்துள்ளனர். அந்த கட்டமைப்பு நீண்ட காலம் நிலைக்காது. இதே தமிழகம் பிரதமர் மோடியை நேசிக்கும், பாராட்டும் காலம் வரும்.

எந்தவொரு போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள அடிப்படைக் கல்வி வலுவாக இருக்க வேண்டும். ஆனால், மாநிலத்துக்கு மாநிலம் கல்வி மாறுபட்டால், போட்டித் தேர்வு எழுதும்போது கோட்டை விட்டுவிடுகிறோம். அதைத்தான் நீட் தேர்வில் சந்தித்து வருகிறோம். எந்தவொரு கொள்கையாக இருந்தாலும், அது மாணவர்களின் எதிர்காலத்துக்கு வலிமை சேர்ப்பதாக, பயனுள்ளதாக இருக்கும் என்றால், அது சற்று கடினமாக இருந்தாலும் ஏற்க வேண்டும்.

போட்டித் தேர்வு மட்டுமே சமூக நீதியைப் பாதுகாக்கும் என்றார் பாரிவேந்தர் பேச்சு அரசியலில் பெரும் தாக்கத்தை உண்டாக்க காரணம் அவர் திமுகவின் மக்களவை உறுப்பினர் மற்றும் பிரபல ஊடகத்தின் நிறுவனரும் கூட இந்த நிலையில் ஏன் பாரிவேந்தர் திடீர் என மோடியை பாராட்டி பேசினார் என்ற கேள்வி எழுந்த சூழலில் அதற்கு அரசியல் வட்டாரத்தில் இரண்டு கருத்துக்கள் கூறப்படுகிறது.

பாரிவேந்தருக்கு திமுக கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருந்தது இல்லை, கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்ற  காரணமாகவே வேறு வழியின்றி கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றார்.

தற்போது திமுகவுடன் பாமக நெருக்கம் காட்டுவதும் அடுத்து வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக திமுக கூட்டணியில் இடம்பெற வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில் இப்போதே பாஜக பக்கம் செல்வது என பாரிவேந்தர் முடிவு எடுத்த காரணமாக அவர் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை பாராட்டி பேசியதாக கூறப்படுகிறது.