Cinema

காலையில் செந்தில் பாலாஜிக்கு வந்த சோதனை..என்ன என்ன போட்டுருக்காங்க பாருங்க...!

senthil balaji
senthil balaji

கோடைகாலத்தில் அளவுக்கு அதிகமான வெயில் மின் தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. அதற்கேற்ப மின்விநியோகம் உள்ளதா என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது  கடந்த 20 ஆம் தேதி இரவில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மின்சார விநியோகம் தடைபட்டது.


இந்தத் திடீர் மின்வெட்டால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். இதனையடுத்து, மின்வாரியத்தின் செயல்பாடுகள் மீது கடும் விமர்சனங்களும் கிளம்பின.இதுதொடர்பாக, இரவு 11.30 மணியளவில் ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் ஒன்றைப் பதிவு செய்தார், தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. அதில், ` இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது.

இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது மின்சார வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது' என விளக்கம் அளித்தார்.

ஆனாலும், பல மணிநேரம் மின்சாரம் தடைபட்டது. இதுதொடர்பாக அமைச்சரின் முகநூல் பக்கத்திலும் மின்தட்டுப்பாட்டால் கடந்த தி.மு.க ஆட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் பதிவிடப்பட்டன.

தமிழகத்தில் தொடரும் மின் வெட்டு விவகாரத்தில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார், குறிப்பாக மின் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு நெட்டிசன்கள் பகிரும் தகவல்கள் பல நேரங்களில் அமைச்சரின் கவனத்திற்கு சென்றுள்ளது.

அதில் ஒன்றுதான் சூர்யவம்சம் படத்தில் வரும் நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்குது என்ற பாடலுடன் பகிரும் மீம் இதில் செந்தில் பாலாஜி மின் வெட்டை மக்களுக்கு பரிசளிப்பது போன்றும் மக்கள் கடந்த திமுக ஆட்சியின் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியை நினைவு படுத்துவது போன்றும் மீம்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இது அமைச்சரின் கவனத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது மொத்தத்தில் மின்வெட்டு விவகாரத்தில் செந்தில் பாலாஜி முழுமையாக விமர்சனத்திற்கு உள்ளாக்க பட்டு வருகிறார், இது குறித்த மீம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.