24 special

மக்களுக்கு பெரிய நாட்டம் இல்லை !! பிலாப் ஆன திமுக பிலான் !! அண்ணாமலை தான் காரணமா?

Stalin, annamalai
Stalin, annamalai

கடந்த ஜூன் மூன்றாம் தேதி கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்கத்தின் போது ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை திமுக நடத்தி வருகிறது. இதன் பின்னணியில் திமுகவின் பல அரசியல் கணக்குகள் இருக்கின்றன! லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ளது.


ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் மூன்று சதவிகிதம் என்ற சொற்ப வாக்கு வித்தியாசத்தில்தான் தான் வெற்றி பெற்றோம், காங்கிரஸ் கூட்டணியும் வலுவாக இல்லை, எதிர்புறம் பிரதமர் மோடி வேட்பாளர் மிகவும் வலுவாக இருக்கிறார், தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை வேலை செய்யவில்லை இந்த நிலையில் நீடித்தால் வரும் 2024 தேர்தலில் பெரும் தோல்வியை சந்திக்க நேரிடும் என திமுக தலைமை முடிவு செய்து உறுப்பினர் சேர்க்கை முகாமை துவங்கியது.

மேலும் தமிழகத்தில் இருக்கக்கூடிய புது வாக்காளர்களை குறிவைத்து இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமை திமுக துரிதப்படுத்தியது, திமுக’வில்  கடந்த மாதம் 22ஆம் தேதி திமுக அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது இந்த கூட்டத்தில் திமுகவில் ஏற்கனவே ஒரு கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.

மேலும் புதிதாக ஒரு கோடி பேரை ஏப்ரல் மூன்றாம் தேதியில் இருந்து ஜூன் 3ஆம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா தொடங்குவதற்குள் சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ஸ்டாலினும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மத்தியில் இந்த உறுப்பினர் சேர்க்கையை தனிப்பட்ட முறையில் அனைவரும் ஒற்றுமையுடன் எடுத்து செல்ல வேண்டும் என கூறினார். 

அதன்படி ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாம்களை தமிழகம் முழுவதும் திமுக நடத்தி வருகிறது, திமுகவில் உள்ள 65 நிர்வாக மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரும் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக உள்ளனர். 

ஆனால் திமுக எதிர்பார்ப்பதற்கு நேர் மாறாக இந்த உறுப்பினர் சேர்க்கை மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை, குறிப்பாக திமுக உறுப்பினர் சேர்க்கை என்றால் பகுதியில் உள்ள இளைஞர்களும், படித்தவர்களும் அதிக அளவில் வந்து சேர்வார்கள், பெண்கள் அதிக அளவில் வந்து சேர்வார்கள் என எதிர்பார்த்த திமுகவினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

இன்னும் பல இடங்களில் ஒரு உறுப்பினர் கூட சேர்க்க முடியாத ஒன்றியம் எல்லாம் கூட இருக்கின்றதாக தகவல்கள் கிடைக்கின்றது. குறிப்பாக சொல்லப்போனால் தமிழகத்தில் திமுக வலுவாக இருக்கக்கூடிய டெல்டா மாவட்டத்திலேயே திமுக உறுப்பினர் சேர்க்கை பின்னடைவை சந்தித்துள்ளது என தகவல்கள் கிடைத்துள்ளன. அதற்கு காரணம் திமுக ஆட்சியின் மீது உள்ள அதிருப்தி மற்றும் வாக்குறுதிகள் செயல்படுத்தவில்லை என்ற நிலை.

 மேலும் பாஜக ,நாம் தமிழர் போன்ற கட்சிகளின் வளர்ச்சி இவை எல்லாம் சேர்ந்து திமுகவில் உறுப்பினர்கள் சேர்க்கையில் மிகவும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டன என்ற தகவல் அறிவாலயத்திற்கு சென்றதால் அறிவாலய தரப்பு ரொம்பவே அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. 

எப்படியும் வரும் ஜூன் மூன்றாம் தேதிக்குள் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என நிர்வாகிகளை துரிதப்படுத்தி வருகிறதாம் அறிவாலய தலைமை, ஆனாலும் நிர்வாகிகள் எதுவும் செய்ய முடியவில்லை என புலம்புகின்றனர்.

 மக்களிடையே அதிருப்தி நிலவுவதால் யாரும் எதிர்பார்த்த அளவில் உறுப்பினர் சேர்க்கையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என வெளிப்படையாகவே திமுக நிர்வாகிகள் புலம்புகின்றனர்.