24 special

முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக திரும்பிய மக்கள்...!அதிர்ச்சியில் முதல்வர்...!

Mk stalin
Mk stalin

திமுகவினர் இது நாள் வரை என்ன ஆயுதத்தை பயன்படுத்தி வந்தார்களோ அதே ஆயுதம் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினை திரும்பி தாக்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக இது வரை சொந்த மாநிலத்தில் உண்டான எதிர்ப்பு தற்போது வட இந்திய மாநிலங்களில் ஒன்றான பீகாரில் உண்டாகி இருப்பது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.


பீஹார் செல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பீகார் மக்கள், சமூக வலைதளங்களில், 'கோ பேக் ஸ்டாலின்' என்ற, 'ஹேஷ்டேகை' பயன்படுத்தி வருகின்றனர் இது, தி.மு.க.,வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. பா.ஜ.,க வை தோற்கடிக்க, நாடு முழுதும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஈடுபட்டு உள்ளார்.

இதற்காக, மத சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம், பீஹார் தலைநகரான பாட்னாவில், அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில், நாளை கூட உள்ளது.இதில் பங்கேற்பதற்காக பாஜகவை எதிர்க்கும் பல கட்சிகளின் தலைவர்கள் ஒன்று இணைய உள்ளனர் முதல்வர் ஸ்டாலின், இன்று மாலை பாட்னாசெல்கிறார். இந்த சூழலில் ஸ்டாலின் வருகைக்கு பீஹார் மாநில மக்கள், சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டுவிட்டர்' பக்கத்தில், 'கோ பேக் ஸ்டாலின்' எங்கள் மாநிலத்திற்கு வராதே திரும்ப போ  என சமூக வலைத்தளங்களில் ஆவேசமாக பேசி வருகின்றனர்.தமிழகத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கிறது, பீஹாரை சேர்ந்த, 'யு டியூபர்' மணீஷ் காஷ்ய்பை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக போலீசார் கைது செய்தது; ஹிந்துக்களுக்கு எதிரான, தி.மு.க., கருத்துக்கள்; ஜாதி அரசியல்; ஹிந்தி மொழி எதிர்ப்பு ஆகியவற்றுக்காக, ஸ்டாலின் வருகையை எதிர்ப்பதாக, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு, 'கோ பேக் ஸ்டாலின்' வாசகம், 'டிரெண்டிங்'கில் முதலிடத்தை பிடித்தது. இதைக் கண்ட, தி.மு.க.,வினர், கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.ஸ்டாலினின் ஹிந்தி எதிர்ப்பு, வட மாநிலங்களில் அவருக்கு எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.பீகார் செல்லும் ஸ்டாலினுக்கு எதிராக பல அமைப்புகள் ஒன்று கூட உள்ளதாகவும் சமீபத்தில் திமுக அமைச்சர்கள் பீகார் தொழிலாளர்கள் குறித்து சர்ச்சையாக பேசியது உள்ளிட்ட காரணத்தை வைத்து ஸ்டாலினின் உண்மை முகம் என்பது பாஜகவிற்கு எதிரானது மட்டுமல்ல கூலி தொழில் செய்யும் பீகார் இளைஞர்களுக்கு எதிரானது என பீகார் மக்களுக்கு தெரியப்படுத்த இருக்கிறார்களாம்.

இதனால் ஸ்டாலினுக்கு பெரிய அளவில் இழப்பு இல்லை என்றாலும் ஸ்டாலினை அழைத்து வரும் பீகார் முதல்வருக்கு பெரிய அளவில் எதிராக முடியும் என்றும் இதனை கணக்கிட்டு தான் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலைஞர் கோட்ட திறப்பு விழாவிற்கு வருகை தரவில்லை என்று அடித்து கூறுகின்றனர் பீகார் அரசியலை தெரிந்தவர்கள்.பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு எதிராக திமுகவினர் GO BACK என்ற ஆயுதத்தை சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது அதே ஆயுதம் வட இந்தியர்கள் மற்றும் இந்து நம்பிக்கையை இழிவு படுத்துவதாக கூறி ஸ்டாலினுக்கு எதிராக திரும்பி இருக்கிறது.