திரைப்பட காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு தற்போது தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளில் ஒன்றான ED இடையே நடைபெறும் அடுத்தடுத்து காட்சிகள் தமிழக அரசியலை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய அரசியலையும் புரட்டி போட்டு இருக்கின்றன.இந்த சூழலில் தற்போது செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனையில் உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் பாதுகாப்புடன் சிகிச்சையில் இருப்பதால் அவரை ED அமைப்பால் விசாரணைக்கு எடுக்க முடியவில்லை.
உடல் நிலையை காரணம் காட்டி செந்தில் பாலாஜி தரப்பு விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதால் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை விசாரணை செய்ய அமலாக்க துறை முறைப்படி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் சட்ட ரீதியாக ed எழுப்பி இருக்கும் கேள்விக்கு பதில் அளிக்க ஆவணங்களை சேகரிக்க இருப்பதால் என்னால் தற்போது விசாரணைக்கு ஆஜராக முடியாது என வழக்கறிஞர் மூலம் ed அனுப்பிய சம்மனுக்கு பதில் கொடுத்து இருந்தார்.
இதனால் இரண்டு வழிகளும் தற்காலிகமாக அடைக்கப்பட்ட காரணத்தால் என்ன செய்வது என யோசித்த ED அடுத்த நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது அதன் அடிப்படையில், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பணம் கொடுத்து, டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கிய நபர்களிடம் விசாரிக்க, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருக்கிறது செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் நடந்த சோதனையில் பரோக்கர்கள் மூலம் அரசு வேலைகேட்டு அணுகிய 6,000 பேரின் விபரங்களை, அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றிஉள்ளனர்.300பேருக்கு,அதில், சிவகாசியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் வாயிலாக, பணிகள்வாங்கி தரப்பட்டுள்ளன என்றும் மாரியப்பன் மூலம் செந்தில் பாலாஜி மற்றும் சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு, தலா, 2 லட்சம், மூன்று லட்சம், 5லட்சம் என வேலைக்கு ஏற்ற வாறு பணத்தை பெற்று கொண்டு இருக்கின்றனரராம்.
அதற்கான ஆவணங்களையும்,அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.அதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி மூலம் வேலை வாங்கி தற்போது பணியில் உள்ள டிரைவர், கண்டக்டர் மற்றும் மெக்கானிக் இன்னும் பிற பணியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தி அமலாக்கத் துறை அதிகாரிகள் வாக்குமூலம்பெற உள்ளனர்.
இதற்காக 80 மேற்பட்ட நபர்களுக்கு 'சம்மன்'அனுப்பி உள்ளனர். இவர்கள் அனைவரும் பணியில் இருப்பதால் கொடுக்கும் வாக்குமூலம் என்பது பெரும் அதிர்வலைகளை உண்டாகும் என கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி இதய சிகிச்சையை காரணம் காட்டி அதிக பச்சம் 30 நாட்கள் விசாரணையில் இருந்து தப்ப முடியும் அதே நேரத்தில் அந்த 30 நாட்களுக்குள் பணம் கொடுத்து வேலை வாங்கிய வேலை கிடைக்காமல் ஏமாந்த பலரிடம் வாக்கு மூலத்தை பதிவு செய்ய ED முடிவு செய்து பணியில் 40% முடித்து விட்டதாம்.
இதனால் மருத்துவ சிகிச்சை என காலம் தாழ்த்தினாலும் அதிக பட்சம் 30 நாட்களில் செந்தில் பாலாஜி மீதான விசாரணை முடிவிற்கு வரும் எனவும் ஜூலை 4-ம் தேதி உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கில் முடிவுரை எழுதும் எனவும் அடித்து கூறுகின்றனர் ஆளும் கட்சி வட்டாரங்கள்.