தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விற்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து ஹிஜாப் விவாகரம் தொடர்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள நபர்களை அடையாளம் காணுமாறு கர்நாடக மாநில முதல்வர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது.
"ஹிஜாப் அணிவது இஸ்லாம் மத நம்பிக்கையின்படி அத்தியாவசியமான பழக்கவழக்கம் அல்ல. மேலும், இது அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 25 வழங்கும் மத உரிமையின் கீழ் வரவில்லை. அதனால், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்" என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்தநிலையில் கர்நாடகாவில் உமாபதி என்ற வழக்கறிஞருக்கு வாட்ஸ் ஆப் மூலம் வந்த வீடியோ ஒன்றில் தலைமை நீதிபதி ரிது ராஜ் அஸ்வதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனை, அவர் உயர்நீதிமன்ற பதிவாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதன் அடிப்படையில், அடையாளம் தெரியாத நபர் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது: ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு ஓய் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளோம். நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக விதான் சவுதா காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என அதிரடியாக தெரிவித்தார்.
இந்த சூழலில் தமிழகத்தில் மதுரை, திருவாடானை பகுதிகளில் கர்நாடாகவில் பள்ளிகளில் ஹிஜாப் தடை விவகாரம் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ள சூழலில் கொலை மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்யவேண்டும் என்ற குரல்கள் வழுத்தன.
இந்த நிலையில் தமிழகத்தில் கர்நாடக நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்யவேண்டும் என தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு கர்நாடக மாநில உள்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது, அதன் அடிப்படையில் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கர்நாடக மாநில காவல்துறையே நேரடியாக களத்தில் இறங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து உடனடியாக பலர் மீது வழக்கு பதிவு செய்யபட்டு ஒருவர் கைது செய்யபட்டுள்ளார், இன்னும் பலர் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் எப்போது வேண்டுமானாலும் கர்நாடக காவல்துறை கர்நாடக நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்ய தமிழகம் வரலாம் என்றும் இது குறித்து தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கண்டன கூட்டத்தில் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள நபர்கள் கர்நாடக காவல்துறை நடவடிக்கையால் தலைமறைவாக சுற்றும் சூழல் உண்டாகி இருக்கிறதாம்.