24 special

மதம் மாறி காதல் திருமணம் செய்த எனக்கு என்ன நடந்தது சாகும் முன் பெண் வெளியிட்ட வீடியோ..!

aburva
aburva

ஹிந்து தர்மத்திற்குள் திருமணம் செய்வது பாதுகாப்பானது. மற்ற மரபுகளுடன் பழகுவது கடினம் என்ற இந்து அமைப்புகளின் கூற்று மீண்டும் நிரூபணமாகியுள்ளது. அபூர்வா ஹிந்து பிராமண குடும்பத்தை சேர்ந்தவர்.கர்நாடகாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முகமது இஜாஸ் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். அபூர்வாவை, திருமணம் செய்து கொண்ட பிறகு அவரது பெயர் அர்ஃபா பானு என்று மாற்றியுள்ளனர். அபூர்வா பிராமண குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை நன்கு அறிந்து அசைவ உணவுகளை சமைக்கest tamil current update சொல்லி,கட்டாயப்படுத்தியுள்ளார்.


வெளியில் செல்ல வேண்டும் என்றால் பர்தா அணிய சொல்லி முகமது இஜாஸ் வற்புறுத்தியுள்ளார். இஸ்லாம் மதத்தில் கடைபிடிக்கும் எல்லாவற்றையும் கடைப்பிடிக்கும்படி முகமது இஜாஸ் கண்டிஷன்களை போட்டு வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் அனைத்திற்கும் அபூர்வா மறுப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளார். பின்னர் முகமது இஜாஸ்க்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகளும் இருப்பது தெரியவந்தது. இதை அறிந்து , முகமது இஜாசை பிரிந்து வாழ முடிவெடுத்து விவாகரத்து கோரியுள்ளார் அபூர்வா.

ஆனால் முகமது இஜாஸ் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.அபூர்வா நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது, இதை அறிந்ததும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அபூர்வாவை சரமாரியாக குத்தி உள்ளார். பாதிக்கப்பட்ட அபூர்வா கர்நாடக மாநிலம் கடக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில், நான் செய்த அதே தவறுகளை யாரும் இனி செய்ய வேண்டாம். எந்த முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் பெண்கள் தங்கள் பெற்றோருடன் விவாதிக்க வேண்டும், தயவுசெய்து உங்கள் பெற்றோரைத் தவிர வேறு யாரையும் நம்ப வேண்டாம். உயிரைக் காப்பாற்றுவதே உங்கள் முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

ஹிந்து தர்மத்தின்படி திருமணம் செய்து கொள்ளுங்கள், ஹிந்து தர்மத்திற்குள் திருமணம் செய்வது பாதுகாப்பானது. மற்ற மரபுகளுடன் பழகுவது கடினம். நமது கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களை நிலைநிறுத்தவும் பாதுகாக்கவும் விரும்பினால், சொந்த சமூகத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும், என்று அபூர்வா தனது வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

மதம் மாறி திருமணம் செய்த பெண்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்படுவதும், பலர் தங்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு அழுவதும் தற்போது தொடர் கதையாக மாறி வருகிறது.