24 special

விடுப்பில் சென்ற போலீசார் அழைப்பு, நிர்வாகிகள் "கண்காணிப்பு" அதிரடி நடவடிக்கையில் உளவுத்துறை!

Police
Police

நாடு முழுவதும் இளைஞர்களுக்கு வர பிரசாதமாக அமைந்த திட்டம் அக்னீபாத், இளம்வயதில் ராணுவத்தில் பணியாற்றவும், அதே நேரத்தில் அக்னீபாத் வீரர்களின் எதிர்காலத்திற்குஉதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து இருக்கிறது.


இந்த திட்டம் இந்தியாவை இராணுவ ரீதியாக பலப்படுத்தும் திட்டம் மட்டும் இல்லாமல், இளைஞர்களுக்கு தேசிய சிந்தனையை விதைக்கவும் பயன்படுத்த படும் என்று எதிர்பார்க்க படுகிறது, அந்த வகையில்  அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக மாணவர்களை போராட்டத்துக்கு துாண்டும் அமைப்புகளை கண்காணிக்க உளவு அமைப்புகளுக்கும், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கும், வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின், அக்னிபத் திட்டத்துக்கு எதிராக, வடமாநிலங்களில் ரயில்களுக்கு தீ வைப்பு, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் போன்ற அசம்பாவித சம்பவங்களுடன் போராட்டங்கள் நடக்கின்றன. அத்திட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் கம்யூனிஸ்ட் ஆதரவு அமைப்புகள், பல்வேறு போராட்டங்களை தொடங்கியுள்ளன.

அதில் பள்ளி, கல்லுாரி மாணவர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை, தமிழக அரசை உஷார்படுத்தியது. இன்று பள்ளி, கல்லுாரிகள் செயல்பட தொடங்கும் நிலையில், மாணவர்களை போராட்டத்துக்கு துாண்டும் அமைப்பின் தலைவர்களை, மாநில உளவுத்துறை, கியூ பிரிவு போலீசார் கண்காணிக்கின்றனர்.

மேலும், தமிழக போலீசில் விடுப்பில் சென்றவர்களை, உடனே பணிக்கு திரும்ப நேற்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரி நுழைவாயில்களில், 'மப்டி'யில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து உளவுத்துறை டி.எஸ்.பி.,க்கள் கூறுகையில், 'மத்திய உளவுத்துறை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அமைப்புகளின் நிர்வாகிகளை கண்காணிக்கிறோம். தேவைப்பட்டால், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றனர் தகவல் - தினமலர்.