24 special

பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்..! வன்முறையாளர்கள் வெறிச்செயல்..!

Bihar
Bihar

பீகார் : அக்னிபாத் என்ற திட்டத்தின் மூலம் மத்திய அரசு ஆயுதப்படைகளுக்கு தற்காலிக பணியாளர்களை தேர்ந்தெடுத்து வருகிறது. இந்த அக்னிபாத் மூலம் நாட்டுக்கு சேவை செய்ய விரும்பும் இளைஞர்கள் ஆர்வமுடன் இணைந்துவருகிறார்கள். இந்த திட்டத்தை ராகுல் மற்றும் ப்ரியங்கா உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.


மேலும் போராட்டத்தை தூண்டுவது போல எதிர்க்கட்சிகள் கருத்துக்களை கூறியதாக சொல்லப்படுகிறது. அதை தொடர்ந்து நேற்று பிஹாரில் எதிர்க்கட்சியை சேர்ந்த இளைஞர்கள் பலர் நூற்றுக்கணக்கில் ஜெகனாபாத் ரயில்நிலையத்தின் முன் கூடினர். அங்கு நின்றுகொண்டிருந்த ரயில்களுக்கு தீவைத்து வன்முறையில் இறங்கினர். மேலும் மாநிலத்தில் பல இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நவாடா பகுதியில் நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த பிஜேபி சட்டமன்ற உறுப்பினரான அருணாதேவியின் கார் மீது வன்முறையாளர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அருணாதேவி உட்பட ஐந்துபேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் நவாடா பகுதியில் செயல்பட்டுவரும் பிஜேபி அலுவலகம் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. அருணா " எனது காரில் கட்டியிருந்த பிஜேபி கொடியை கண்ட போராட்டக்காரர்கள் ஆத்திரமடைந்தனர். கொடியை ஆவேசத்துடன் கிழித்தெறிந்தார். மேலும் தொடர் கல்வீச்சில் ஈடுபட்டனர். எனது ஓட்டுநர்  பாதுகாவலர்கள் மற்றும் காரியதரிசிகள் இருவர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்த புகார் எதுவும் நான்அளிக்கவில்லை " என அருணா தேவி கூறினார்.

மேலும் அர்ரா ரயில்நிலையத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் மீது கற்களை வீசத்தொடங்கினர். அங்கிருந்த தண்டவாளத்தில் மரபலகைகளை போட்டு தீவைத்தனர். வன்முறை அதிகரிக்கவே போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். அதேபோல ஜெகனாபாத்தில் ரயில்நிலையத்தில் இருந்த தண்டவாளங்களை போராட்டக்காரர்கள் அகற்றினர்.

அப்போது போலீசார் வன்முறையில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது கற்களை வீசி தாக்க ஆரம்பித்தனர். அதனால் போலீசாரும் கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் பல ரயில்வே நிலையங்களில் போராட்டக்காரர்கள் தண்டவாளத்தில் டயர்களை போட்டு எரித்தனர். டூர் ஆப் ட்யூட்டி மற்றும் அக்னிபாத் திட்டங்களை வாபஸ் பெறக்கோரி மாநிலம் முழுவதும் முழக்கமிட்டுக்கொண்டே போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பிஹார் மாநிலம் முழுவதும் பதட்டமான சூழல்  நிலவி வருகிறது.