24 special

விசாரணையில் தொக்காக சிக்கி முதல்வர் வீட்டிற்கு ஓடிய அமைச்சர் பொன்முடி..! பரபர பின்னணி..!

Ponmudi,mk stalin
Ponmudi,mk stalin

கடந்த 2006ம் ஆண்டு முதல்  2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் பொன்முடி கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொழுது செம்மண் குவாரி சம்பந்தப்பட்ட வழக்கில் அரசுக்கு வரவேண்டிய வருவாயை மறைத்து முறைகேடாக சம்பாதித்த புகாரில் அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இறங்கி அதிரடி சோதனைகள் ஈடுபட்டது. 


கடந்த 17ஆம் தேதி காலை 7 மணிக்கு  இறங்கிய சோதனை அன்று இரவு தான் முடிந்தது சோதனையின் முடிவில் அமைச்சர் பொன்முடி நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். விடிய விடிய அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடத்திவிட்டு, பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை வீட்டுக்கு அனுப்பி மீண்டும் மறுநாள் மாலை 4 மணிக்கு விசாரணைக்கு வர வேண்டுமென அழைத்தனர். 

அதனை தொடர்ந்து நேற்று மாலை 4 மணிக்கு அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு சென்று நேற்று இரவு தான் வீடு திரும்பினார். விசாரணையில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் வெளிநாடுகளில் முதலீடு செய்தது! அமைச்சர் பொன்முடி மண் குவாரி வழக்கில் சேர்த்த பணம்! இது மட்டுமல்லாமல் அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்த பீரோ மற்றும் லாக்கர் ஆகியவற்றில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்! மேலும் அவரது கல்லூரியில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்! அவரது சொகுசு காரில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்! அதுமட்டுமல்லாமல் அவரது சொகுசு கார் உள்ளிட்ட பலவற்றைப் பற்றி அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் துருவி துருவி துருவி விசாரணை மேற்கொண்டதில் அமைச்சர் பொன்முடி நிறைய தகவலை அமலாக்க துறையுடன் கொடுத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. .

மேலும் இந்த விசாரணை மற்றும் ரெய்டு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்காக பெங்களூர் சென்றதும் குறிப்பிடத்தக்கது, அந்த கூட்டம் நடத்த சமயத்தில் பொன்முடி விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது விசாரித்து வந்துள்ளார் என கூறுகின்றனர் முதல்வருக்கு நெருக்கமானவர்கள்!

அதே சமயத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியிடம் 6மணி நேர விசாரணை மேற்கொண்டு அவரை திருப்பி அனுப்பியுள்ளனர். விசாரணையின் முடிவில் அமலாக்கத்துறை நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் 'கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி அவரது மகன் உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் செம்மண் குவாரி உரிமம் வழங்கியது தெரிய வருகிறது. சட்டவிரோத செம்மண் குவாரி மூலம் கிடைக்கப்பெற்ற பல லட்ச ரூபாய் பணம் பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் பினாமி பெயரிலான வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இரண்டு நிறுவனங்களுக்கு வங்கி கணக்குகளுக்கு முறைகேடாக பணம் அனுப்பப்பட்டுள்ளது பின்னர் 2022ம் ஆண்டு  100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது இந்த வெளிநாட்டு முதலீடுகள் அனைத்தும் ஹவாலா பணமாகவே மாற்றப்பட்டுள்ளது' என அறிக்கை கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இப்படி ஹவாலா வழக்காக அமலாக்கத்துறை கையில் எடுத்த நிலையில் இந்த வழக்கு விசாரணை முடிந்த அடுத்தநாள் காலையிலேயே அமைச்சர் பொன்முடி ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்துள்ளார். முதல்வர் பெங்களூர் இருந்து நேற்று இரவு தான் சென்னை திரும்பினார் இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரி விசாரணை தொடர்பாக முதலமைச்சரிடம் விளக்கம் அளிக்க அமைச்சர் பொன்முடி முதல்வரை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சந்திப்பின்போது அமலாக்கத்துறை என்ன கேட்டார்கள்? என்ன நடந்தது? இதனையடுத்து என்ன செய்யலாம்? சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கலாம்? என முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமைச்சர் பொன்முடி விவாதித்ததாக தகவல்கள் கிடைக்கின்றன. இப்படி தொடர்ச்சியாக ரைடு மற்றும் விசாரணையால் அமைச்சர் பொன்முடி தடுமாறி இருப்பதாகவும் அமைச்சர் பொன்முடியிடம் 'கவலைப்படாதீர்கள் பார்த்துக் கொள்ளலாம்' என முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.