24 special

இது வேற லெவல் திட்டமா இருக்கே...! அமலாக்கத்துறையின் திஹார் பிளான்...!

Pokkiri, enforcement
Pokkiri, enforcement

அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி வீடு அலுவலகங்களில் இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட சோதனையில் பல திடுக்கிடும் தகவல்களும், பல ஆவணங்களும் அமலாக்கத்துறை கையில் சிக்கி உள்ளது. குறிப்பாக கூற வேண்டும் என்றால் அமலாக்கத்துறை இறங்கியது அமைச்சர் பொன்முடி கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு அமைச்சராக இருந்த பொழுது கனிமவளத்துறையில் அவர் முறைகேடாக செம்மண் குவாரியை பினாமி பெயரில் எடுத்து சேர்த்த சொத்து புகாரில் விசாரிக்கத்தான். 


ஆனால் அமலாக்கத்துறை தற்போது இறங்கியவுடன் அதிகாரிகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக ரெய்டில் சிக்கியதாக தெரிகிறது. இந்த அதிரடி ரெய்டு முடிந்த கையோடு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி ஆகிய இருவரையும் அமலாக்குத்துறை அதிகாரிகள் கையோடு நுங்கம்பாக்கம் அலுவலகம் அழைத்துச் சென்று அவர்கள் இருவரிடம் தனித்தனியாக வைத்து விசாரித்ததில் அவர்கள் கூறிய பதிவுகளை வைத்து பல விவரங்களை சேகரித்துள்ளனர். இறுதியாக ஆறு மணி நேரம் நடைபெற்ற விசாரணையின் முடிவில் அமைச்சர் பொன்முடி மற்றும் எம்பி கௌதம சிகாமணி ஆகிய இருவரும் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை நேற்று இரவு அறிக்கை வெளியிட்டனர். 

அந்த அறிக்கையில் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்த பொழுது அவரது மகன், உறவினர்கள் பெயரில், வினாமிகள் பெயரில் செம்மண் குவாரி உரிமம் வழங்கியது தெரிய வருகிறது சட்டவிரோத செம்மண் குவாரி மூலம் கிடைக்கப்பெற்ற பல லட்ச ரூபாய் பணம் பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் பினாமி பெயரிலான வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தோனேசிய நிறுவனம் அப்போது 41,57 லட்சத்துக்கு வாங்கப்பட்டு பின்னர் 2022 இல் 100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. 

இந்த வெளிநாடு முதலீடுகள் அனைத்தும் அதிக மதிப்பில் ஹவாலா பணமாக மாற்றப்பட்டுள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்' என குறிப்பிட்டுள்ளனர். கடந்த இரண்டு தினங்களாக நடந்த ரெய்டில் பொன்முடி வீட்டில் கணக்கில் வராத 81 லட்சம் பணமும் மற்றும் சில அயல் நாட்டு கரன்சிகளும் கைப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கிறது. இது மட்டுமில்லாமல் முறையாக விளக்கம் அளிக்காத 13 லட்சம் மதிப்பிலான பிரிட்டிஷ் பவுண்டு வேறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவை அனைத்தும் கணக்கில் வராத பணம் என்பதும் குறிப்பிடத்தக்கது இது மட்டுமல்லாமல் அயல் நாட்டு கார்களும் இந்த விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன அதிலிருந்து ஆவணங்களும் தற்பொழுது அமலாக்கத்துறை வசம் இருக்கின்றன. இப்படி கடந்த ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பொழுது நடைபெற்ற ஊழலை விசாரிக்க சென்றால் தற்பொழுது ஹவாலா பணம் மற்றும் பாரின் கார்கள், ஃபாரின் கரன்சி ஆகியவை ஒட்டுமொத்தமாக அனைத்தும் சிக்கி அதை கண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிர்ந்துள்ளனர். 

மேலும் இப்படி மொத்தமாக சிக்கியதால் அடுத்த கட்ட நடவடிக்கையாக அமலாக்கத்துறை உடனடியாக இதனை வழக்காக பதிவு செய்து அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கும் என தெரிகிறது அப்படி அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணியிடம் மேலும் பல விசாரணைகள் நடத்த தயாராகி விட்டதாகவும் அப்படி அவர்கள் தயாராக பட்சத்தில் மேலும் நடத்தப்படும் விசாரணைக்கு ஏதும் இடையூறுகள் ஏற்படா வண்ணம் அவர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிகிறது. 

மேலும் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் அதாவது சிறையில் வைத்து விசாரிக்கலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படி சிறையில் வைத்து விசாரிக்க நினைத்தால் அமலாக்க துறையின் முதல் விருப்பமாக புழல் இருக்கும் என தெரிகிறது, அப்படி தமிழ்நாட்டில் அதுவும் புழல் சிறையில் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடத்தும் பொழுது ஏதேனும் இடர்பாடுகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் திகார் கொண்டு செல்லவும் அமலாக்கத்துறை தயங்காது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இப்படி அடுத்தகட்டம் புழலா? திகாரா? என்ற நிலையில் இருந்து வருகிறது அமைச்சர் பொன்முடியின் விவகாரம்.