24 special

தமிழக அரசியலில் ஏற்படும் மாற்றம்...பாஜக தலைமையில் கூட்டணி?

edapadi, annamalai
edapadi, annamalai

நாடளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் தொடங்க இருக்கும் நிலையில், தமிழகத்தில் அதிமுக-பாஜக இரு கட்சிகளிடம் ஒரு வார காலமாக நிலவி வந்த பனிப்போர் நேற்று முன் தினம் முடிவுக்கு வந்தது. அதாவது பாஜகவுடன் கூட்டணி தொடரப்போவதில்லை என அதிமுக தலைமை அறிவித்தது. இந்நிலையில் டெல்லி தலைமை அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஏற்பாடு செய்து வருகின்றன. அதன்படி, பாஜக தலைமையில் தமிழகத்தில் கூட்டணி அமைக்க தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக பாஜக தேசிய முன்னாள் தலைவர் சிடி ரவி தெரிவித்திருந்தார். தமிழக கட்சியில் ஏற்படும் மாற்றம்?பாஜகவுடன் கூட்டணி இல்லை என விலகிய அதிமுக கூட்டணியில் நாம் தமிழர் கட்சி சீமான் கைகோர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரித்து பார்த்ததில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதால், கட்சியினருக்கு தொடர்ந்து பொருளாதார இழப்பு தான் ஏற்படுகிறது.


'பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியது போல், காவிரி விவகாரத்தில், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து, திமுக வெளியேற துணிச்சல் இருக்கிறதா?' என்று, சீமான் கேட்டுள்ளார். சீமானின் இந்த பேச்சை தான், அதிமுக-வுடன் நெருங்குவதற்கான முன்னோட்டமாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. இதேபோல் விடுதலை சிறுத்தை கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் அதிமுக வட்டாரத்திற்குள் வர வாய்ப்பு இருப்பதாக தகவல் கசிந்துள்ளன. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்த தமாகா, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தற்போது எந்த பக்கம் போவது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். அனைத்து கட்சி தலைவர்களும் சமீபத்தில் செய்தியாளர்கள் பேட்டியில் தெரிவிப்பது! தேர்தல் நேரத்தில் தான் "தாங்கள் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்று தெரிவித்து வருகின்றனர்". இதற்கான கரணம் என்னவென்றால் தேசிய கட்சியுடன் அதிமுக விலகியதே கூட்டணி உறுதியில்லாமல் கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர்.

டெல்லி தலைமை நிச்சியம் தமிழகத்தில் வரவிற்கும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை காண வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அண்ணாமலை தொடங்கி இருக்கும் நடைபயணம் மூலம் நாளடைவில் மக்களிடம் பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அந்த வகையில் பாஜகவில் கைகோர்ப்பது பாமக, தேமுதிக, புதிய தமிழகம் கட்சி, அமமுக ஆகிய கட்சிகளுடன் தேர்தல் களத்தில் இறங்கவுள்ளதாக அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர். இப்படி கூட்டணி அமைந்தால் நிச்சயம் தமிழகத்தில் மாற்றம் ஏற்பட கூடும் என தெரிகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதற்கு இதுவரை டெல்லியில் இருந்து எந்த கருத்துக்களும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணியில் இருந்து தேசிய கட்சியான காங்கிரஸ் விலகுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்....!