திமுக ஆட்சி உருவாக காரணமாக அறியப்படும் பிரசாந்த் கிஷோரே தற்போது திமுக ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பை உண்டாக்கும் வண்ணம் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பாக பிரசாந்த் கிஷோர் தற்போது செய்துள்ள செயல் திமுக ஆட்சிக்கு பெரும் பின்னடவை உண்டாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
வடமாநில தொழிலாளர்களை விரட்டி அடிப்பேன் என்ற சீமான் பேச்சுக்கு, தமிழ்நாடு காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று பிரஷாந்த கிஷோர் கேள்வி எழுப்பிள்ளார்.தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் பல இடங்களில் தொடர்ச்சியாக தாக்கப்படும் வீடியோ காட்சி சமூக வளையதளத்தில் வேகமாக பரவியதையடுத்து, இணையதளத்தில் பரவும் காட்சி பொய்யானவை, இதனால் வடமாநில தொழிலாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இதன் தொடர்பாக 9 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் தெரித்தன.
மேலும், இந்த விவகாரத்தில் கருத்து தெரித்த பிரஷாந்த் கிஷோர், தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் வீடியோ போலியானது தான், ஆனால் தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது ஏற்படும் அச்சுறுத்தல் உண்மையில் நடக்கின்றன. இதுதொடர்பாக உண்மையான வீடியோவை நான் விரைவில் வெளியிடுவேன் என்று அப்போதே தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழக காவல்துறை பொய்யான வதந்தி பரப்புதல் போன்ற 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இந்த கைது நடவடிக்கையை விமர்சித்த அண்ணாமலை, என் மீது வழக்கு போட்டுள்ளீர்களே, முடிந்தால் பிரஷாந்த் கிஷோர் மீது உங்களால் வழக்கு போட முடியுமா? என்று அப்பொதே கேள்வி எழுப்பியிருந்தார்.இந்த விவகாரம் தற்பொது தனிந்து உள்ள நிலையில், வடமாநில பிரச்சனையை கருத்தில் கொண்டு பிரஷாந்த் கிஷோர் ட்விட்டரில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் சீமான் பேசியதாவது; நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஹிந்திக்கார பயன் எல்லாம் தெறிச்சு ஓட போறான், எத்தனை பேரை எங்க நிக்க வச்சு வெலுப்பனு தெரியாது, அவன் மேல கஞ்சா வச்சிருக்கானு வழக்கு போடு, அபின் வச்சிருக்கானு வழக்கு போடு, பாலியல் தொந்தரவு கொடுக்கரானு வழக்கு போடு. 1,000 பேர் மேல் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தால், வடமாநில காரன் தானாக சொந்த ஊருக்கு ஓடி விடுவான் என்று சீமான் பேசும் வீடியோவை பிரசாந்த் கிஷோர் ஹிந்தி மொழியில் மொழி பெயர்த்து அவருடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.மேலும், வட மாநிலத்தவரை தவறாக சித்தறிக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு டிவிட்டரின் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பிய நிலையில் சீமான் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது முழுக்க முழுக்க தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான அரசியல் நிலைப்பாடக மாற வாய்ப்புகள் அதிகம்... அதே நேரத்தில் பிரசாந்த் கிஷோர் வீடியோ வெளியிட்டும் சீமான் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆட்சிக்கே சிக்கல் உண்டாகாலம் என்பதால் என்ன முடிவு எடுப்பது என்பதில் கடும் சிக்கலில் சிக்கி இருக்கிறதாம் ஆளும் திமுக அரசு.திமுக ஆட்சி கட்டிலில் உட்கார ஒரு காரணமாக இருந்த பிரசாந்த் கிஷோரே தற்போது திமுக ஆட்சி கவிழவும் காரணமாக அமைவரோ என்றே சந்தேகம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.