24 special

வீட்டுக்குள்ளேயே தொழுகை நடத்துங்கள்..! மாவட்ட நிர்வாகம் !

Bjp
Bjp

மத்தியபிரதேசம் : கடந்த ஏப்ரல் 10 அன்று கார்கோனில் அமைதியாக சென்ற ராமநவமி ஊர்வலத்தின்போது வகுப்புவாத குழு ஒன்று ஊர்வலத்தில் கல்லெறிந்து வன்முறையை தூண்டியது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் காவல்துறை கண்காணிப்பாளர் சித்தார்த் சௌத்ரி சுடப்பட்டார். மேலும் ஒருவர் கொல்லப்பட்டார்.


இந்த நிகழ்வை தொடர்ந்து ஹனுமான் ஜெயந்தி அன்றும் வன்முறை நடைபெற்றது. இதையடுத்து கார்கோன் மாவட்ட நிர்வாகம் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ராமநவமி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட கலவரத்தை கருத்தில் கொண்டு கார்கோன் பகுதியில் ஈத் பண்டிகை வருவதையொட்டி மே 2 மற்றும் 3 ஆகிய இரண்டு நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கார்கோன் மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் சம்மர் சிங் " மே 2 அல்லது 3 அன்று ஈத் பண்டிகை கொண்டாட வாய்ப்புள்ளது. அந்த இரு நாட்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஈத் பிரார்த்தனைகள் வீட்டிற்குள்ளேயே செய்யப்படவேண்டும்.இந்த நாட்களில் கடைகள் திறந்திருக்கும்.தேர்வுக்கு செல்லும் மாணவ மாணவியருக்கு பாஸ் வழங்கப்படும். 

மேலும் அட்சயதிருதியை, பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு எந்தவொரு நிகழ்ச்சியும் மாவட்டத்தில் நடைபெற அனுமதிக்கப்படமாட்டாது." என கூறியுள்ளார். இதனிடையே ராமநவமியின் பொது ஏற்பட்ட வன்முறையில் 24பேர் படுகாயமடைந்தனர். ஆனந்த் நகர் பகுதியில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை ஐந்துபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கார்கோன் முழுவதும் நடைபெற்ற 64 வகுப்புவாத மோதல்கள் தொடர்பாக இதுவரை 150 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவல்துறை அதிகாரியை சுட்டதாக ஒரு மர்மநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் அம்பேத்கார் பிறந்தநாள், மஹாவீர் ஜெயந்தி புனிதவெள்ளி உட்பட பல பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளதால் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் முன்னெச்சரிக்கை பகுதிகளில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.