வருடங்கள் கடந்து செல்ல நமது நாடு உலகின் மற்ற நாடுகளை விட பொருளாதாரத்தில் நிலையான தன்மையை பெற்று வருகிறது மந்த நிலையை உலகின் மற்ற நாடுகள் சந்தித்த பொழுதும் நமது நாட்டின் பொருளாதாரம் நிலைமை சீராக உள்ளது என மத்திய அமைச்சர்கள் தெரிவிக்கும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மேலும் அறிவியல் ரீதியாக இந்திய விண்வெளி துறை மாபெரும் சாதனை செய்து மற்ற உலக நாடுகளுக்கு இலக்கு நிர்ணயித்து வருகிறது அந்த அளவிற்கு முன்னேற்றங்களை இந்தியா கண்டு வருகின்ற நிலையில் இதே அறிவியல் தொழில்நுட்பத்தால் போலி வீடியோக்களும் படங்களும் பெரும் பாதிப்புகளை ஏற்படுகிறது.
அதாவது டீப் ஃபேக் எனப்படுகின்ற ஏ ஐ தொழில்நுட்ப மூலம் ஒருவரின் முகத்தை வேறு ஒருவரின் உடலோடு மாஃபிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடப்படுகிறது. இதற்கு முதலில் நடிகையின் ராஸ்மிகா மந்தனா மன உளைச்சலுக்கு உள்ளானார். அதாவது நீச்சல் உடையில் ஒரு பெண்மணி லிப்டுக்குள் வருவது போன்ற வீடியோ வெளியானது அந்த பெண்மணியின் ஒரிஜினல் முகத்திற்கு பதிலாக நடிகை ராஸ்மிகாவின் முகம் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு அந்த வீடியோவில் உண்மையாக உள்ள பெண்மணியே இது குறித்து தெளிவுபடுத்தினார், ராஸ்மிகாவின் டீப் பேக் மூலம் எடிட் செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.
இதற்கு பிரபல திரை உலக நடிகை நடிகர்கள் பெரும் கண்டனம் தெரிவித்ததோடு ராஷ்மிகாவிற்கு ஆதரவாகவும் கருத்து பதிவிட்டனர். ஆனால் இவரை அடுத்து நடிகை காஜோலும் இந்த டிப் பேக் சர்ச்சைக்கு ஆளானார். காஜல் குறித்தும் போலியாக சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியானதை அடுத்து நடிகை கேத்தரினா கைஃப் போலி புகைப்படமும் பரவியது, அதாவது இவர் நடித்த படம் டைகர் கடந்த 3 நவம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது, இப்படத்தில் அவர் குளியல் அறையில் வெள்ளை நிற துண்டை அணிந்து சண்டையிடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இந்த காட்சி படம் பார்க்கப்படும் பொழுது சந்தித்த சவால்கள் குறித்து தெரிவித்திருந்தார்.
இந்த புகைப்படத்தை யாரோ ஒருவர் டீ பேக் மூலம் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவரது வரிசையில் அடுத்ததாக பாலிவுட் நடிகை ஆலியா பட் முகத்தையும் பயன்படுத்தி வேறு ஒரு பெண்ணின் முகத்தோடு டீப் பேக் செய்து அதில் ஆபாச அசைவுகளை வெளிப்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருப்பது திரை உலகை அதிர வைத்தது.
இதற்கிடையில் டீப் பேக் இல் பிரதமர் நரேந்திர மோடி குறித்த வீடியோ வெளியானதும் குறிப்பிடத்தக்கது. இது போன்ற இன்னல்களுக்கு நடிகை ராஷ்மிகா உள்ளாக்கப்பட்ட போது மத்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு தகுந்த நடவடிக்கைகளை எடுத்தது மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதத்தையும் அறிவித்தது. மேலும் சமூக வலைதள நிறுவனங்களுக்கும் இது போன்ற வீடியோக்கள் வெளியிடப்படுவதை தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் ஒவ்வொரு நிறுவனங்கள் தரப்பில் எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இருப்பினும் தற்பொழுது பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் டீப் பேக் வீடியோ வெளியாகியுள்ளது, ஒரு நிறுவனத்தின் பிரமோஷனில் பங்கேற்கும் பிரியங்கா சோப்ரா அதில் தனது ஆண்டு வருமானத்தை கூறி அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக விளம்பரம் செய்வது போன்று வீடியோ டீப் பேக் செய்யப்பட்டுள்ளது. அதாவது அவர் வேறொரு வீடியோவில் பேசிய கருத்தை மற்றொரு நிறுவனத்தின் வீடியோவில் பொருத்தி இதுபோன்று பிரமோஷன் எடிட் செய்துள்ளனர். இப்படி வாரம் ஒரு முறை படம் வெளியாவது போன்று பிரபல நடிகைகளின் டீ பேக் வீடியோ அல்லது படங்கள் வெளியாவது வழக்கமாகியுள்ளது. இதனால் மத்திய அரசு இதில் இன்னும் தீவிரமாக இறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கிணங்க மத்திய அமைச்சகம் விரைவில் கடுமையான சட்டங்களை கொண்டுவர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது..