24 special

காங்கிரஸ் கட்சி தீவிர ஆலோசனை... இண்டியா கூட்டணியில் வெளியேறும் அந்த ஒரு கட்சி?

CM Stalin, India alliance
CM Stalin, India alliance

சதீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் தெலுங்கானா போன்ற ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் கடந்த மாதம் முடிவடைந்து முடிவுகள் வெளியாகி காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் விசிக, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவர்கள் இண்டியா கூட்டணி மிக பெரிய வெற்றி பெரும் என தெரிவித்தனர். ஆனால் தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறியது. தேர்தல் முடிந்தவுடன் இண்டியா கூட்டணி பெரிய கூட்டத்தை கூட்ட திட்டமிட்டனர் அதில் மொத்தமாக உதயநிதி ஸ்டாலின் மண் வாரி போட்டுவிட்டதாக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் புலம்பினர்.இப்போது அதனை காங்கிரஸ் கட்சியினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.


நடந்து முடிந்த தேர்தலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலத்திலும் காங்கிரஸ் தன் வசம் வைத்திருந்தது. இந்த தேர்தலின் மூலம் காங்கிரஸ் கையில் இருந்து சென்றது. ஐந்து மாநிலங்களில் தெலுங்கானாவில் மட்டுமே ஆட்சியை பிடித்தது மீதி 4 மாநிலத்தில் மண்ணை கவ்வியது. இந்நிலையில் இண்டியா கூட்டணி கூட்டத்தை கூட்ட கடந்த 6ம் தேதி முடிவு செய்தனர். ஆனால், தோல்விக்கு பிறகு அதனை மாற்ற மொத்தமாக முடிவெடுத்துள்ளனர். இந்த தோல்விக்கு உதயநிதியின் சனாதனம் பேச்சு விவகாரம் தான் என பேசப்பட்டது. மேலும், காங்கிரஸ் கட்டமைப்பு சரியில்லை என உட்கட்சிக்குள்ளயே பேசப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூட்டம் நடத்தினர். அப்போது, ரகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்க்கே போன்றவர்கள் ஆலோசித்தனை இந்த கூட்டத்தில் திமுக கட்சியில் உள்ள அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியதை பாஜக போன்ற காட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் யுக்தியாக பயன்படுத்தி கொண்டனர் எனவும் வர கூடிய நாடளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை மாற்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சனாதன விவகாரத்தை கையில் எடுத்து சட்டமன்ற தேர்தலை காலி செய்தனர். இபோது மேலும், எம்பி செந்தில்குமார் 'கோ முத்ரா' பேச்சை எடுத்தது இண்டியா கூட்டணிக்குள் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக சனாதனம், நாகலாந்து மக்களை இழிவு படுத்தும் விதமாக நாய் இறைச்சி உட்கொள்வதாக திமுக அமைச்சர் பேசினார். இப்போது கோமூத்ரா போன்று தொடந்து இந்து மக்களை அவமதிக்கும் விதமாக திமுகவினர் பேசுவதை தொடர்கதையாக வைத்துள்ளனர்  இதற்கெல்லாம் மக்கள் தேர்தலின் போது திருப்பி கொடுப்பார்கள் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.