24 special

புழல் டு திகார் செந்தில் பாலாஜிக்கு கிளம்பும் சிக்கல்..! திமுக தலையில் இடி..!

MK Stalin, Senthil Balaji
MK Stalin, Senthil Balaji

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்றத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அவர் தொடர்ந்து ஜாமின் கோரி வந்த நிலையில் அவரின் காவல் நீடிப்பு இதுவரை 36 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 


செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கஸ்டடியில் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளி என நிரூபித்து அவரை சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தான் செந்தில் பாலாஜி தனது உடல்நலனை காரணம் காட்டி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை ஜாமீன் கோரினார் ஆனாலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வருகிறார்.

இந்தநிலையில், தொடர்ந்து சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி மருத்துவ காரணங்களை காட்டியும் ஜாமின் கோரினார் இருப்பினும் நீதிபதிகள் அதனை மருந்துகள் மூலமே சரி செய்து கொள்ளலாம் என்று கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தனர். சமீபத்தில் கூட செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைகளுக்கு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என செய்திகள் வெளியாகின. இந்தசூழ்நிலையில், செந்தில்பாலாஜி சென்னையில் இருந்து திகார் சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை, ஈரோடு மற்றும் கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜியின் செல்வாக்கு விளையாடியதாக கூறப்படுகிறது. சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி தினமும் திமுக தலைமையிடம் செல்போனில் தகவலை கொடுப்பதாகவும் என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தல் கொடுத்து வருவதாகவும் கூறப்டுகிறது. தேர்தலுக்கு முன்னதாக வேட்பாளர் தேர்வின் போது கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக வேலை செய்ய சொன்னதாகவும், கோவையில் செந்தில் பாலாஜியின் அறிவுறுத்தல் பேரில் தான் திமுக வேட்பாளர் நிற்கவைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் சென்னையில் இருப்பதன் காரணத்தால் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்படுகிறது. 

உடனடியாக திகாருக்கு மாற்றினால் இந்த பிரச்சனை இருக்காது என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அவர் தாக்கல் செய்துள்ள வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில் புதிய மனுவால் உத்தரவு ஜுன் 4ம் தேதிக்கு தள்ளிப்போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.