திமுக மூத்த அமைச்சர்கள் தொடங்கி முன்னாள் மத்திய அமைச்சர் TR பாலு வரை தமிழக ஆளுநரை ஒருமையில் பேசி வந்தனர் போதாத குறைக்கு திமுக கூட்டணியை சேர்ந்த இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்கள் பலர் ஆளுநருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் வெளிப்படையாக சமூக வலைத்தளங்களில் பேசிய வீடியோக்கள் வைரலான நிலையில் அவர்கள் மீது பல்வேறு புகார்கள் கொடுத்த நிலையிலும் ஆளும் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றசாட்டு எழுந்தது
இந்த நிலையில் ஆளுநரை நோக்கி ஆளுநரின் உயிருக்கு அச்சுருத்தல் விடும் விதமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தற்போது முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த கரும் புள்ளியாக மாறி இருக்கிறது.அதுவும் இந்தியாவின் முதல் குடிமகள் ஜனாதிபதி முர்மு தமிழகம் வர இருக்கும் சூழலில் ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வெடித்து இருப்பதும் குண்டை வீசிய நபர் சமீபத்தில் தான் ஜாமீனில் வந்த சம்பவமும் அவரை காவல் துறை கண் காணிக்காமல் விட்டதும் ஆளும் திமுக அரசு மீது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
இந்த நிலையில்தான் உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்த முதல்வர் ஸ்டாலின், குடியரசுத் தலைவர் முர்மு இன்று சென்னை வருவதை முன்னிட்டு எந்த வித அசம்பாவிதங்களும் நடக்காத வண்ணம் பாதுகாப்பை பல படுத்த உத்தரவு போட்டு இருக்கிறாராம்.இரண்டுநாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று மாலை சென்னை வருகிறார் சென்னையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பெங்களூருவில் இருந்து குடியரசுத் தலைவர் திரௌபதி மர்மு இன்று மாலை 6 மணிக்கு விமானப்படை தனி விமானம் மூலம் புறப்பட இருக்கிறார்.
மாலை 6.50மணிக்கு சென்னை பழையவிமான நிலையத்திற்கு வரும் திரௌபதி மர்மு சாலை மார்க்கமாக ஆளுநர் மாளிகை செல்கிறார். இரவு ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுக்க இருக்கும் அவர் நாளை காலை 9 முதல் 9.30 மணி வரை முக்கிய பிரமுகர்களை ஆளுநர் மாளிகையில் வைத்தே சந்திக்க இருக்கிறார்.குடியரசு தலைவர் ஆளுநர் மாளிகையிலேயே தங்குவதை முன்னிட்டு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழக காவல்துறை பாதுகாப்பை பல படுத்தி இருக்கிறது.
குடியரசு தலைவர் சென்னை வரும் போதும் அவரை வரவேற்க முதல்வர் ஸ்டாலின் நேரடியாக விமான நிலையம் செல்வதுடன் உடன் அமைச்சர்களையும் அழைத்து செல்ல இருக்கிறாராம்.தமிழக ஆளுநர் ரவி குடியரசு தலைவரை சந்தித்து பேச 1 மணி நேரம் தனியாக கேட்டு இருப்பதால் ஆட்சிக்கு ஏதேனும் பிரச்சனை வருமா என்ற அச்சத்தில் இருக்கிறாராம் ஸ்டாலின், சில மாதங்கள் முன்னர் ஆளுநருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை தமிழக அரசு குறைத்த நிலையில் நேற்று ஆளுநருக்கே கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் என்ற பதவியே டம்மி ஆளுநர் ரவியில்லை நீங்கள் ஆர் எஸ் எஸ் ரவி என உதயநிதி தொடங்கி திமுக தலைவர்கள் பேசி வந்த நிலையில் தற்போது ஆளுநர் மாளிகையில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு மொத்த திமுகவின் அடி மடியையும் அசைத்து பார்த்து இருக்கிறது.குடியரசு தலைவர் தமிழகத்தில் இருந்து மீண்டும் டெல்லி திரும்பும் வரை எந்த வித சிறு அசம்பவிதமும் நடக்க கூடாது என முதல்வர் ஸ்டாலின் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அப்படி ஏதேனும் நடந்தால் தமிழக ஆளுநர் தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் கொடுப்பார் என்பதால் மிரண்டு போயி இருக்கிறதாம் ஆளும் கட்சி வட்டாரம்.